Tamilnadu Cricket Team: வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு டி20 அணி கேப்டனாக நியமனம்.. துணை கேப்டன் யார் தெரியுமா?
Oct 04, 2023, 02:17 PM IST
Syed Mushtaq Ali Trophy: வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு அணிக்கா நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இளம் கேப்டனாக அறிமுகப் போகிறார்.
சையது முஷ்டாக் அலி டி20 போட்டிக்கு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட அணி முஷ்டாக் அலி போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் கேப்டனாக பொறுப்பேற்பார் என சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.
அது தற்போது உண்மையாகியிருக்கிறது. அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை சையது முஷ்டாக் அலி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழ்நாடு அணியின் கேப்டனாக அறிமுகமாகக் காத்திருக்கிறார் வாஷிங்டன்.
பி.சாய் சுதர்ஷன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் தமிழ்நாடு அணிக்கா நீண்ட காலமாக விளையாடி வருகிறார். இளம் கேப்டனாக அறிமுகப் போகிறார்.
விஜய் சங்கர், என்.ஜெகதீசன், பி.அபராஜித், ஷாருக் கான், டி.நடராஜான், சந்தீப் வாரியர், ஆர்.சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் சென் ஆகியோர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சையது முஷ்டாக் அலி டிராபி என்பது இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் ஆகும். இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது, இது ரஞ்சி கோப்பை டீம்களில் ஒன்றாகும். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சையத் முஷ்டாக் அலியின் பெயரால் அழைக்கப்படுகிறது.
2006-2007 முதல் சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது. இத்தொடரில் முதல் முதலில் சதம் விளாசிய வீரர் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆவார்.
மும்பை நடப்பு சாம்பியனாகவும், தமிழ்நாடு மூன்று முறை கோப்பையை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாகவும் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்