தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Afg Vs Sa Semi-final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி

AFG vs SA Semi-Final: தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் சிதறிய ஆப்கன்-வெறும் 56 ரன்கள், அனைத்து விக்கெட்டும் காலி

Manigandan K T HT Tamil

Jun 27, 2024, 07:18 AM IST

google News
AFG vs SA Semi-Final: ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. (REUTERS)
AFG vs SA Semi-Final: ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

AFG vs SA Semi-Final: ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கெத்து காட்டி வந்த ஆப்கன் முக்கியமான அரையிறுதி போட்டியில் மண்ணைக் கவ்வியது.

ஒரு பேட்ஸ்மேன் கூட சரியாக ஆடவில்லை. அந்த 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆட்டமிழந்தது. 11.5 ஓவர்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் ஐசிசி உலகக் கோப்பையில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாட தென்னாப்பிரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போராடுகின்றன. குரூப் 2-ல் தென்னாப்பிரிக்கா ஆட்டமிழக்காமல் இருந்தது, ஆப்கானிஸ்தான் குரூப் ஒன்றில் இந்தியாவுக்கு பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்தது,  ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கம்பீரமாக அரையிறுதிக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா ஐசிசி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். அந்த வேகம் பந்துவீச்சில் வெளிப்பட்டது.

வந்த வேகத்தில் பெவிலியன்

ஜேன்சன், ஷாம்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சுருட்டினர். ரபாடா, நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அதிகபட்சமாக ஆப்கன் வீரர் ஒமர்ஜாய் 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் வந்த வேகத்தில் பெவிலியன் சென்றனர். 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது.

கேப்டன் ரஷித் கான்

முன்னதாக, டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கூறுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம், இது ஒரு புதிய விக்கெட், நாங்கள் போர்டில் ஒரு நல்ல ஸ்கோரை பெற விரும்புகிறோம். மிடில் ஆர்டரில் அதிக நேரம் கிடைக்கவில்லை, அவர்கள் 15-16 ஓவர்களில் வெளியே வர வேண்டும், அது எளிதானது அல்ல. டாப் ஆர்டர் பொறுப்பேற்று அவர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தது நல்ல விஷயம்'' என்றார்.

தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருப்போம், ஆனால் இது ஒரு புதிய விக்கெட், முதலில் பந்துவீசுவது குறித்து நாங்கள் மிகவும் வருத்தப்படவில்லை. நிலைமைகள் கடினமாக உள்ளன. பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்று நம்புவோம். எங்களுக்கும் அதே டீம்தான்." என்றார் மார்க்ரம்.

ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், அஸ்மதுல்லா உமர்சாய், குல்பாதின் நைப், முகமது நபி, கரீம் ஜனத், ரஷீத் கான், நங்கேலியாலியா கரோட், நூர் அகமது, நவீன்-உல்-ஹக், பசல்ஹக் ஃபரூக்கி

தென் ஆப்பிரிக்கா: குயிண்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன், கேஷவ் மகராஜ், காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுப்போட்டிகள் முடிந்து அரையிறுதிக்கு வந்துவிட்டது. இன்று இரவு இந்தியாவும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும் மோதுகின்றன. கயானாவில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. 

கடந்த வாரம் அவமானகரமான குழு நிலை வெளியேற்றத்தின் விளிம்பில் இருந்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் வெற்றியின் உதவியுடன் சூப்பர் எட்டுக்கு தகுதி பெற்றது, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவை வீழ்த்தி டி 20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக அரையிறுதி இடத்தைப் பிடித்தது. மறுபக்கம் இந்தியாவும் இதுவரை ஓர் ஆட்டத்தில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கெத்தாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பையில் இவ்வாறு தான் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்று வரை முன்னேறியது இந்தியா. ஆனால், துரதிருஷ்டவசமாக ஆஸி.,யிடம் தோல்வி கண்டது.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி