தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Sa Preview: ஹாட்ரிக் ப்ளானில் களமிறங்கும் ஆஸி.,! பழிதீர்க்க 16 ஆண்டுகள் வரை காத்திருக்கும் தென் ஆப்பரிக்கா

AUS vs SA Preview: ஹாட்ரிக் ப்ளானில் களமிறங்கும் ஆஸி.,! பழிதீர்க்க 16 ஆண்டுகள் வரை காத்திருக்கும் தென் ஆப்பரிக்கா

Nov 16, 2023, 06:10 AM IST

google News
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்அவுட் போட்டிகளில் இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் தென் ஆப்பரிக்கா இந்த முறை வரலாற்றை மாற்றி அமைக்க முழு திறமையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்அவுட் போட்டிகளில் இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் தென் ஆப்பரிக்கா இந்த முறை வரலாற்றை மாற்றி அமைக்க முழு திறமையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கோப்பை நாக்அவுட் போட்டிகளில் இரண்டு தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் தென் ஆப்பரிக்கா இந்த முறை வரலாற்றை மாற்றி அமைக்க முழு திறமையும் வெளிக்காட்டும் என எதிர்பார்க்கலாம்.

உலகக் கோப்பை 2023 இரண்டாவது அரையிறுதி போட்டி ஆஸ்திரேலியா - தென் ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று நான்காவது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா தங்களது முதல் போட்டியை ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடவுள்ளது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கு விளையாடிய தென் ஆப்பரிக்கா 83 ரன்களில் ஆல்அவுட்டாகி, 243 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலியா அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவி அடுத்து கம்பேக் கொடுத்து, தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா, தென் ஆப்பரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா, பின்னார் தான் ஒரு சாம்பியன் அணி என்பதை நிருபிக்கும் விதமாக விஸ்வரும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தென் ஆப்பரிக்காவும் 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வளர்ந்து வரும் அணியான நெதர்லாந்துக்கு எதிராக தோல்வியை தழுவிய தென் ஆப்பரிக்கா, பின்னர் இந்தியாவுக்கு எதிராக 100 ரன்கள் கூட அடிக்காமல் படுதோல்வியை சந்தித்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக இருந்து வருகின்றன.

முதல் பேட்டிங், சேஸிங் என இரண்டிலும் கலக்கி வரும் அணியாக ஆஸ்திரேலியா இருந்து வரும் நிலையில், தென் ஆப்பரிக்கா சேஸிங்கில் தடுமாறும் அணியாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் பேட்டிங்கில் 428 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்த அணியாக தென் ஆப்பரிக்கா உள்ளது. கொல்கத்தா மைதானத்தில் இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு சேஸிங் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் நிலவரம்

கருப்பு மணல் கொண்ட ஆடுகளத்தை கொண்டிருக்கும் கொல்கத்தா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாகவும், ஸ்பின், வேகப்பந்து வீச்சாளர்கள் என இருவருக்கும் கைகொடுக்கும் விதமாக இந்த மைதானம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களை காட்டிலும் ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவும் என கணிக்கப்பட்டுள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை மழை காரணமாக போட்டி தடைபட்டால், ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் போட்டி நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கப்படும்.

உலகக் கோப்பை போட்டிகளின் நாக்அவுட் சுற்றில், தென் ஆப்பரிக்காவை 1999, 2007 ஆகிய இரு ஆண்டுகளிலும் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இதில் 1999 போட்டி டை ஆனாலும், ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிபோட்டிக்கு தகுதி பெற்று கோப்பையை வென்றது. அப்போது தொடங்கிய ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் அதன் 2003, 2007 வரை தொடர்ந்தது. இந்த இரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதைத்தொடர்ந்து 16 ஆண்டுகள் கழித்து அரையிறுதி போட்டியில் மீண்டும் தென் ஆப்பரிக்காவை சந்திக்கும் ஆஸ்திரேலியா மூன்றாவது முறையாக அந்த அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அதே சமயம் நாக்அவுட் போட்டியில் பெற்ற இரண்டு தோல்வியால் ஏமாற்றம் அடைந்திருக்கும் தென் ஆப்பரிக்கா இந்த முறை பழிதீர்த்து வரலாற்றை மாற்றி அமைக்க தனது முழு திறமையும் வெளிப்படுத்தும் என நம்பலாம்.

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி