Ruturaj Gaikwad Half Century: புல்லட் வேக ஆட்டம்.. 32 பந்துகளில் அரை சதம் விளாசிய ருதுராஜ்
Nov 28, 2023, 08:19 PM IST
Ind vs Aus 3rd t20i: 2வது டி20 ஆட்டத்திலும் அரை சதம் பதிவு செய்தார் ருதுராஜ் கெய்க்வாட். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் 32 பந்துகளில் 51 விளாசி அசத்தினார். இது 4வது டி20 அரை சதம் ஆகும்.
2வது டி20இலும் அரை சதம் விளாசி அசத்தினார். தொடர்ச்சியாக 2 அரை சதங்களை அடித்துள்ளார் கெய்க்வாட்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி, அஸ்ஸாம் மாநிலம், கவுஹாட்டியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் நின்று ஆடினார். எனினும், அவரும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டி அரை சதம் விளாசினார்.
முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும் அணிக்கு போட்டி சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் கடைசியாக 2022 இல் இந்த மைதானத்தில் விளையாடிய டி20 விளையாடின. அந்த ஆட்டத்தில் 458 ரன்கள் எடுக்கப்பட்டது. பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவில் இருக்கும் சிறந்த ஆடுகளங்களில் ஒன்றாகும், மேலும் இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களைப் போன்று மற்றொரு அதிக ஸ்கோரை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். டாஸ் வென்று முதலில் பந்துவீசுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும், ஏனெனில் ஆட்டத்தின் பிற்பகுதியில் பனி முக்கியப் பங்கு வகிக்கும்.
2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, இன்றைய ஆட்டத்தில் ஜெயித்தால் ஹாட்ரிக் வெற்றி பெறுவதுடன், தொடரையும் கைப்பற்றிவிடும்.
அவ்வாறு நடந்துவிட்டால் டிசம்பர் 1 ராய்ப்பூரில் 4வது டி20 போட்டியும், பெங்களூரில் டிசம்பர் 3ம் தேதி 5வது டி20 போட்டியும் பெரிய மெனக்கெடல் இல்லாமல் இந்திய அணியால் விளையாட முடியும்.
அதேநேரம், 2 முறை அடிபட்ட ஆஸ்திரேலியா, 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என மல்லுக்கட்டும்.
டாபிக்ஸ்