Ollie Pope: 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவ சாதனை புரிந்த ஒல்லி போப்..என்ன தெரியுமா?
Sep 07, 2024, 06:07 PM IST
147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஒல்லி போப்.
இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம் இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்கிருக்கும் இலங்கை அணி ஓவல் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஏற்கனவே நடைபெற்ற ஓல்ட் ட்ராஃபோர்ட், லாட்ர்ஸ் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது.
இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஒல்லி போப் ஸ்டாண்டபை கேப்டனாக செயல்பட்டார். ஏற்கனவே பார்ம் இல்லாமல் இருந்து வரும் போப் கடைசி நான்கு இன்னிங்ஸில் 6,6,1, 17 என அவுட்டாகி பேட்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்டில் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பியுள்ளார் போப்.
போப் தனித்துவ சாதனை
இந்த போட்டியில் போப் 103 ரன்கள் எடுத்த நிலையில், 147 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெவ்வேறு எதிரிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு சதங்களை வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக அடித்த முதல் பேட்டர் ஆனார்.
இங்கிலாந்து டாப் பேட்டரான போப் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளை தொடர்ந்து தற்போது இலங்கைக்கு எதிராக போப் சதம் அடித்துள்ளார்.
இங்கிலாந்து ஆதிக்கம்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது, வானிலை இடையூறுகளை மீறி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை எடுத்தது.
பென் டக்கெட்டின் ஆக்ரோஷமான இன்னிங்ஸை வெளிப்படுத்தி 86 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். அதே நேரத்தில் மோசமான பார்மில் இருந்த ஒல்லி போப் பார்முக்கு திரும்பி சதமடித்தார்.
ஏற்கனவே வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று, ஒயிட்வாஷ் செய்தது.
மோசமான வெளிச்சம் மற்றும் மழை காரணமாக அந்த நாள் ஆட்டம் மூன்று மணிநேரம் நிறுத்தப்பட்டது.
இங்கிலாந்து அறிமுக வீரர் ஜோஷ் ஹல், 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர், குறைந்த முதல் தர அனுபவம் இருந்தபோதிலும், விரைவாக அணியில் சேர்க்கப்பட்டார். பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், அடுத்த ஆண்டு ஆஷஸ் உட்பட எதிர்காலத் தொடர்களைக் கருத்தில் கொண்டு, ஹல்லை அணிக்குள் கொண்டுவருவதற்கான "ஹன்ச்" மற்றும் "பண்ட்" இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. சிறப்பாக பேட் செய்த கேப்டன் 154 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஓபனர் பென் டக்கெட் 86 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை
இலங்கை பவுலர்களில் மிலன் ரத்னநாயகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். விஸ்வா பெர்ணான்டோ, லஹிரு குமாரா, தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்