தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mi Vs Lsg Result: ரோகித் ஷர்மா அதிரடி, நமன் திர் வானவேடிக்கை! தோல்வியுடன் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ்

MI vs LSG Result: ரோகித் ஷர்மா அதிரடி, நமன் திர் வானவேடிக்கை! தோல்வியுடன் கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ்

May 18, 2024, 12:45 AM IST

google News
MI vs LSG Result: ஓபனிங்கில் ரோகித் ஷர்மா அதிரடி, பினிஷிங்கில் இளம் பேட்ஸ்மேன் நமன் திர் வானவேடிக்கையாக மும்பை இந்தியன்ஸ் வெற்றியை நோக்கி சென்று, தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. (AP)
MI vs LSG Result: ஓபனிங்கில் ரோகித் ஷர்மா அதிரடி, பினிஷிங்கில் இளம் பேட்ஸ்மேன் நமன் திர் வானவேடிக்கையாக மும்பை இந்தியன்ஸ் வெற்றியை நோக்கி சென்று, தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

MI vs LSG Result: ஓபனிங்கில் ரோகித் ஷர்மா அதிரடி, பினிஷிங்கில் இளம் பேட்ஸ்மேன் நமன் திர் வானவேடிக்கையாக மும்பை இந்தியன்ஸ் வெற்றியை நோக்கி சென்று, தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7வது வெற்றியை பெற்று 14 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் 67வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி போட்டியாக இது அமைந்தது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளில் 4 வெற்றி, 8 புள்ளியுடன் கடைசி இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளை பெற்று 7வது இடத்தில் இருந்தது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் மோதலில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் டிவால்ட் பிரீவிஸ், அர்ஜுன் டென்டுல்கர், ரோமரியோ ஷெப்பர்டு, நுவன் துஷாரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தேவ்தத் படிக்கல், மேட் ஹென்றி, மோக்சின் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்த சீசனில் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் அர்ஜுன் டென்டுல்கர்.

லக்னோ ரன்குவிப்பு

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 75, கேஎல் ராகுல் 55, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28, ஆயஷ் பதோனி 22 ரன்கள் அடித்தனர். மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ப்யூஷ் சாவ்லா, நுவன் துஷாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மும்பை சேஸிங்

215 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. இதனால் 18 வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றி பெற்றது. 

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 68, நமன் திர் 62 ரன்கள் அடித்தனர். லக்னோ பவுலர்களில் ரவி பிஷ்னோய், நவின் உல் ஹக் ஆகியோர் 2 விக்கெட்டுகளை கைபற்றினர்.  க்ருணால் பாண்ட்யா, மேக்சின் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். 

இந்த வெற்றியால் லக்னோ அணி 14 புள்ளிகளை பெற்று 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.

ரோகித் ஷர்மா அதிரடி

இம்பேக்ட் வீரராக ஓபனிங்கில் களமிறங்கிய ரோகித் ஷர்மா அதிரடியான தொடக்கத்தை தந்தார். அவருடன் டிவால்ட் ப்ரிவிஸ் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக பேட் செய்து வந்த ப்ரிவிஸ் 20 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் டக்அவுட்டாகி வெளியேறினார்.

இதற்கிடையே பவுண்டரி, சிக்ஸர் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோகித் ஷர்மா 28 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

38 பந்துகளில் 68 ரன்கள் அடித்த ரோகித் ஷர்மா, தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்தார்.

நமன் திர் வானவேடிக்கை

கடைசி கட்டத்தில் பேட் செய்த இளம் பேட்ஸ்மேனான நமன் திர் தொடக்கத்தில் பொறுமையும் பின்னர் மெல்ல மெல்ல அதிரடியும் காட்டினார்.  தேவைப்படும் ரன்ரேட் 20 ரன்கள் மேல் இருந்த நிலையில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்க விட்டு வானவேடிக்கை காட்டியதுடன் சிறிய நம்பிக்கையும் அளித்தார். 

சிறப்பாக பேட் செய்த அவர், 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த திர் 28 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்தார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களை அடித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி