தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Glenn Maxwel: மாத்திரை விழுங்கியதால் தான் அதிவேக சதம் பதிவு செய்தாரா மேக்ஸ்வெல்?

Glenn Maxwel: மாத்திரை விழுங்கியதால் தான் அதிவேக சதம் பதிவு செய்தாரா மேக்ஸ்வெல்?

Manigandan K T HT Tamil

Jan 08, 2024, 11:08 AM IST

google News
Cricket Worldcup 2023: ஆஸி., வீரர் கிளென் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Cricket Worldcup 2023: ஆஸி., வீரர் கிளென் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Cricket Worldcup 2023: ஆஸி., வீரர் கிளென் மேக்ஸ்வெல் உலகக் கோப்பையில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

காயம்பட்ட புலி அபாயகரமானது என்று கூறுவார்கள். ஆனால் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேக்ஸ்வெல் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை காண்பித்து விட்டார். 

2015 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஏபி டி வில்லியர்ஸின் சதத்தை யூடியூப்பில் தேடுங்கள். இன்னும் சமீபத்திய உதாரணம் வேண்டுமா? புதன்கிழமை கிளென் மேக்ஸ்வெல் செய்ததைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்.

போட்டிக்கு முந்தைய நாள் டி வில்லியர்ஸுக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டது. அவரால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை, மேலும் ஆட்ட நாளில் அவருக்கு ஊசி போட வேண்டியிருந்தது. விளைவு? ஒருநாள்உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 150 ரன்களை எட்டினார். டி வில்லியர்ஸ் 66 பந்துகளில் 162 ரன்களுடன் தென் ஆப்பிரிக்காவுக்கு 408 ரன்களை எடுக்க உதவினார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மேக்ஸ்வெல் அதையே செய்தார். டெல்லியில் 2023 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக பேட் செய்ய செல்வதற்கு முன், மேக்ஸ்வெல் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் பேட்டிங் செய்ய முடியுமா என்று கூட உறுதியாக தெரியவில்லை, ஆனால் அவர் பேட்டிங் செய்தார், ஆனால் அவர் உலகக் கோப்பை வரலாற்றில் மிகவும் அபாயகரமான இன்னிங்ஸ்களில் ஒன்றாக வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் எட்டு சிக்ஸர்களை அடித்தார் - ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் சேர்ந்து உலகக் கோப்பை போட்டியில் ஆஸியின் இரண்டாவது அதிகபட்ச சிக்ஸர் -பதிவு செய்ததுடன், 40 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை எட்டினார் - இது உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமான சதமாக பதிவானது. மேக்ஸ்வெல் 50 லிருந்து 100 ரன்களை பதிவு செய்ய 13 பந்துகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டார். நெதர்லாந்தின் பந்துவீச்சை அவர் ஸ்விட்ச் ஹிட்கள், ரிவர்ஸ் ஸ்வீப்கள் மற்றும் ஸ்கூப்களின் முழு வித்தைகளை இறங்கி பொளந்து கட்டினார்.

44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்ததை அடுத்து, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பேட்டிங் செய்வதற்கு சற்று முன் மேக்ஸ்வெல் மாத்திரையை உட்கொண்ட வீடியோவை ஐசிசி பகிர்ந்துள்ளது.

“ஆமாம், நான் நன்றாக இல்லை. நான் உடை மாற்றும் அறையில் அமர்ந்திருந்தேன், நான் உண்மையில் பேட் செய்ய விரும்பவில்லை, இது கடந்த ஆட்டத்தை விட சற்று வித்தியாசமானது. நம்பிக்கைகள் அதிகம் இல்லை. ஆனால், சதம் அடித்துவிட்டேன்,”என்று பின்னர் செய்தியாளர்களிடம் மேக்ஸ்வெல் கூறினார்.

மேக்ஸ்வெல்லின் எட்டு சிக்ஸர்களும் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் கடைசி ஐந்து ஓவர்களில் வந்தவை. இந்தப் போட்டிக்கு முன் சிறந்த ஃபார்மில் இல்லாத ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், நேற்றைய ஆட்டத்தில் வெளுத்து வாங்கினார்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி