தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Kkr Full Squad: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முழு வீரர்கள் லிஸ்ட் இதோ

KKR full squad: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முழு வீரர்கள் லிஸ்ட் இதோ

Manigandan K T HT Tamil

Jan 06, 2024, 03:29 PM IST

google News
IPL 2024 Auction: ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் செவ்வாய்க்கிழமை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார். KKR வாங்கிய வீரர்களின் முழு பட்டியல் இதோ. (@KKRiders)
IPL 2024 Auction: ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் செவ்வாய்க்கிழமை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார். KKR வாங்கிய வீரர்களின் முழு பட்டியல் இதோ.

IPL 2024 Auction: ஐபிஎல் வரலாற்றில் மிட்செல் ஸ்டார்க் செவ்வாய்க்கிழமை அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார். KKR வாங்கிய வீரர்களின் முழு பட்டியல் இதோ.

ஐபிஎல் 2024 ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனைவரையும் திகைக்க வைத்தது, செவ்வாயன்று ஐபிஎல் ஏலத்தில் வரலாறு படைத்தது எனவும் கூறலாம். இரண்டு முறை சாம்பியனான அந்த அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை, ரூ.2 கோடி அடிப்படை விலையில் இருந்து ரூ.24.75 கோடிக்கு வாங்கியது.

முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆஸி., கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியதில் இருந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் 2023 ODI உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவின் அணியில் இடம் பெற்றனர்.

ஜியோசினிமாவிடம் பேசிய ஸ்டார்க், "எனது மனைவி அலிசா உண்மையில் ஆஸ்திரேலிய பெண்கள் அணியுடன் இந்தியாவில் இருக்கிறார். அவர்களின் கவரேஜ் ஆஸ்திரேலியாவில் என்னை விட சற்று முன்னிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதனால் எனக்கு புதுப்பிப்புகள் கிடைத்தன. நான் அதை திரையில் பார்ப்பதற்கு முன்பே எனக்கு தெரியவந்தது, உண்மையில் இது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, மேலும் வரும் சீசனில் மீண்டும் ஐபிஎல்லில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். KKR இல் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆமாம், நீங்கள் சொன்னது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. நண்பர்களே, நீங்கள் குறிப்பிட்டது போல், நான் இந்தியர்களுக்கு எதிராக கிரிக்கெட் விளையாடினேன், இப்போது நான் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவேன். ஆண்ட்ரே மற்றும் ஜேசன் போன்ற பெரிய பேட்ஸ்மேன்களுடன் அவர்கள் எப்படி விளையாடுகிறார் என்பதை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். KKR அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் நான் உண்மையில் வேல்யூவை சேர்க்க முடியும் என்று நம்புகிறேன், ”என்று அவர் கூறினார்.

KKR நிர்வாகம், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் (ரூ. 1.5 கோடி), கஸ் அட்கின்சன் (ரூ. 1 கோடி), முஜீப் ரஹ்மான் (ரூ. 2 கோடி) ஆகியோரை வாங்கியது.

இதற்கிடையில், சேத்தன் சகாரியா (ரூ. 50 லட்சம்), மணீஷ் பாண்டே (ரூ. 50 லட்சம்), சாகிப் ஹுசைன் (ரூ. 20 லட்சம்), அங்கிரிஷ் ரகுவன்ஷி (ரூ. 20 லட்சம்), ரமன்தீப் சிங் (ரூ. 20 லட்சம்), கே.எஸ்.பரத் (ரூ. 50 லட்சம்) ஆகிய இந்திய வீரர்களையும் கொல்கத்தா வாங்கியது.

KKR வாங்கிய வீரர்களின் முழு பட்டியல்:

கேஎஸ் பரத்: ரூ 50 லட்சம்.

சேத்தன் சகாரியா: ரூ 50 லட்சம்.

மிட்செல் ஸ்டார்க்: ரூ 24.75 கோடி

ஷெர்பேன் ரதர்ஃபோர்ட்: ரூ.1.5 கோடி

மணீஷ் பாண்டே: 50 லட்சம்

கஸ் அட்கின்சன்: ரூ 1 கோடி

சாகிப் உசேன்: 20 லட்சம்

முஜீப் ரஹ்மான்: ரூ 2 கோடி

அங்கிரிஷ் ரகுவன்ஷி: ரூ 20 லட்சம்

ராமன்தீப் உசேன்: 20 லட்சம்

சாகிப் உசேன்: 20 லட்சம்

தக்கவைக்கப்பட்டவர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரின்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஜேசன் ராய். சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி