தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர்.. 14 வயது பொடியன் சூர்யவன்ஷி சம்பவம்! கடைசி ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி

முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர்.. 14 வயது பொடியன் சூர்யவன்ஷி சம்பவம்! கடைசி ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தி லக்னோ த்ரில் வெற்றி

Published Apr 19, 2025 11:55 PM IST

google News
ஐபிஎல் 2025: கடைசி 4 ஓவரில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து வைத்திருந்த போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றியை பெற்று டாப் 4 இடத்துக்கு முன்னேறியது. (AFP)
ஐபிஎல் 2025: கடைசி 4 ஓவரில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து வைத்திருந்த போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றியை பெற்று டாப் 4 இடத்துக்கு முன்னேறியது.

ஐபிஎல் 2025: கடைசி 4 ஓவரில் பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் ராயல்ஸ், வெற்றியை கிட்டத்தட்ட உறுதி செய்து வைத்திருந்த போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றியை பெற்று டாப் 4 இடத்துக்கு முன்னேறியது.

ஐபிஎல் 2025 தொடரின் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வதி இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திலும் இருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முந்தைய போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயத்தால் சஞ்ச சாம்சன் விளையாடாத நிலையில், ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரராக 14 வயது நிமரம்பிய வைபவ் சூரியவன்ஷி சேர்க்கப்பட்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 180 ரன்கள் எடுத்த நிலையில், இந்த இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பந்த் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 80 ரன்கள் அடித்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெயஸ்வால் 74, ரியான் பராக் 39, வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்கள் எடுத்தனர்.

லக்னோ பவுலர்களில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷர்துல் தாக்கூர், ஐடன் மார்க்ம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

முதல் பந்தில் சிக்ஸர்

சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட 14 வயது நிரம்பிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஓபனராக களமிறங்கினார். சந்தீப் ஷர்மாவுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக பேட் செய்த இவர் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எக்ஸ்ட்ரா கவர் திசையில் இமாலய சிக்ஸரை பறக்கவிட்டார்.

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி, பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். மற்றொரு ஓபனரான யஷஸ்வி ஜெயஸ்வாலும் தனது பாணியில் அதிரடியில் ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்தது. சிறப்பான தொடக்கத்தை தந்த சூர்யவனஷி 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் - சூர்யவன்ஷி ஜோடி 8.4 ஓவரில் 85 ரன்கள் குவித்தது.

ஜெயஸ்வால் அரைசதம்

மூன்றவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராணா 8 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் பேட் செய்த ரியான் பராக் - ஜெயஸ்வால் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 31 பந்துகளில் அரசதமடித்த ஜெய்ஸ்வால் அதன் பின்னரும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.

5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்த ஜெயஸ்வால் 52 பந்துகளில் 74 ரன்கள் அடித்த நிலையில் ஆவேஷ் கான் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

கடைசி 4 ஓவரில் திருப்பம்

ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 10 ஓவரில் 94 ரன்கள் எடுத்தது. கடைசி 4 ஓவரில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் 8 விக்கெட்டுகளை வைத்திருந்தது. வெற்றிக்கான வாய்ப்பு ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பிரகாசமாக இருந்த நிலையில், லக்னோ பவுலர்கள் எஞ்சிய 4 ஓவர்களை சிறப்பாக பவுலிங் செய்தனர்.

சிறப்பாக பேட் செய்து களத்தில் இருந்த ரியான் பராக், யஷஸ்வி ஜெயஸ்வால் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் அடுத்தடுத்து தூக்கினார் ஆவேஷ் கான். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிறப்பாக பவுலிங் செய்த ஆவேஷ் கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த வெற்றியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5வது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.