தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்! அப்துல் சமாத் அதிரடியால் லக்னோ 180 ரன்கள் குவிப்பு.. ராஜஸ்தான் மோசமான பவுலிங்

ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள்! அப்துல் சமாத் அதிரடியால் லக்னோ 180 ரன்கள் குவிப்பு.. ராஜஸ்தான் மோசமான பவுலிங்

Updated Apr 19, 2025 09:42 PM IST

google News
ஐபிஎல் 2025: ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கி விட்டார் அப்துல் சமாத். இந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டதால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 180 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் ஷர்மா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். (PTI)
ஐபிஎல் 2025: ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கி விட்டார் அப்துல் சமாத். இந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டதால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 180 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் ஷர்மா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் 2025: ஆட்டத்தின் கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை பறக்கி விட்டார் அப்துல் சமாத். இந்த ஓவரில் 27 ரன்கள் அடிக்கப்பட்டதால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 180 ரன்கள் குவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சந்தீப் ஷர்மா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் 2025 தொடரின் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கும் முன் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8வதி இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முந்தையை போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் தோல்வியில் இருந்து மீளும் விதமாக இந்த போட்டி அமைந்திருந்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்ச சாம்சன் இந்த போட்டியில் விளையாடவில்லை. எனவே ரியான் பராக் கேப்டன்சி செய்கிறார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி இம்பேக்ட் வீரர் லவிஸ்டில் இடம்பிடித்துள்ளார். அவர் களமிறக்கப்பட்டால் ஐபிஎல் வரலாற்றில் களமிறங்கும் இளவயது வீரர் ஆவார். லக்னோ அணியில் ஆகாஷ் தீப்க்கு பதிலாக பிரின்ஸ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மார்க்ரம் 66, ஆயுஷ் பதோனி 0, அப்துல் சமாத் 30 ரன்கள் அடித்துள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஹசரங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

மார்க்ரம் அரைசதம்

லக்னோ அணி ஓபனரான மிட்செல் மார்ஷ் 4 ரன்னில் அவுட்டானார். இவரை தொடர்ந்து பார்மில் இருக்கும் நிக்கோலஸ் பூரான் 11 ரன்னில் நடையை கட்டினார். இதனால் பவர்ப்ளே முடிவதற்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது லக்னோ அணி.

பவர்ப்ளே ஓவர்களில் லக்னோ 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது. முந்தைய போட்டியில் அரைசதமடித்த கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இதற்கிடையே தொடக்கத்தில் இருந்த ஒற்றை ஆளாக ரன்களை குவித்து வந்த மார்க்ரம் சிறப்பாக பேட் செய்து 31 பந்துகளில் அரைசதமடித்தார். தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்ட மார்க்ரம் 66 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பெறிகொடுத்தாரப்.

இம்பேக்ட் காட்டிய பதோனி

மிட்செல் மார்ஷ் அவுட்டான பின்பு ஆயுஷ் பதோனி இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதோனி நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். 33 பந்துகளில் அரைசதமடித்த பதோனி அடுத்த பந்திலேயே அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அப்துல் சமாத் கேமியோ

கடைசி கட்டத்தில் அதிரடிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் அப்துல் சமாத். 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட இவர் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங்கை கொடுத்தார். நான்கு சிக்ஸர்களையும் ஆட்டத்தின் கடைசி ஓவரில் பறக்கவிட்டார் சமாத். இவரது அதிரடியால் லக்னோ அணி இந்த ஓவரில் 27 ரன்கள் குவித்தது.

முதல் 10 ஓவரில் 76 ரன்கள் அடித்த லக்னோ, அடுத்த 10 ஓவரில் 104 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பவுலர்கள் சந்தீப் ஷர்மா 4 ஓவர்களில் 55 ரன்கள் வாரி வழங்கினார். அதேபோல் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பவுலிங் செய்து 4 ஓவரில் 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.