தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Icc: Odi, T20i கிரிக்கெட்டில் புதிய முறையை புகுத்த ஐசிசி முடிவு

ICC: ODI, T20I கிரிக்கெட்டில் புதிய முறையை புகுத்த ஐசிசி முடிவு

Manigandan K T HT Tamil

Nov 22, 2023, 11:50 AM IST

google News
ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என ஐசிசி அறிவித்துள்ளது. (REUTERS)
ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என ஐசிசி அறிவித்துள்ளது.

ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்களுக்கு சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாது என ஐசிசி அறிவித்துள்ளது.

ஆணாக இருந்து பின்னர் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியவர்கள் மகளிர் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என ஐசிசி தெரிவித்தது.

சர்வதேச பெண்கள் விளையாட்டின் நேர்மை மற்றும் வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த முடிவை எடுப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஒன்பது மாத ஆலோசனை செயல்முறையைத் தொடர்ந்து சர்வதேச விளையாட்டுக்கான புதிய பாலின தகுதி விதிமுறைகளுக்கு ஐ.சி.சி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

"புதிய கொள்கையானது பின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது (முன்னுரிமையின் அடிப்படையில்), பெண்களின் விளையாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல், பாதுகாப்பு, நேர்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்கும்" என்று ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

"கிரிக்கட் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக இருக்கும் என்பதால், அது ஒலிம்பிக் வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். இந்த பாலினப் பிரச்சினை உலக அளவில் மிகப்பெரியது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) விதிமுறைகளை மாற்றி விளையாட்டுகளுக்கு ஏற்ற விதிமுறைகளை செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது" என்று ஐசிசி வட்டாரம் தெரிவித்துள்ளது.

உலக தடகளப் போட்டிகள் (WA), டிராக் அண்ட் ஃபீல்ட் மற்றும் பிற ஓட்டப் போட்டிகளுக்கான நிர்வாகக் குழுவும், ஆண் பருவ வயதை அடைந்த திருநங்கைகள், சர்வதேச போட்டிகளில் பெண்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது. இந்தக் கொள்கை மார்ச் 31, 2023 முதல் அமலுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை காஸ்டர் செமனேயா, அவரது உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருந்ததால், அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பவுலிங் செய்யும் அணிகள் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க ஸ்டாப் க்ளாக் என்ற புதிய முறையை கொண்டு வர ஐசிசி முடிவு செய்திருக்கிறது.

அதாவது பந்துவீசும் அணி முந்தைய ஓவரை வீசிய பிறகு, 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை வீசத் தொடங்கிவிட வேண்டும். இதை ஓர் இன்னிங்ஸில் மூன்று முறைக்கு மேல் மீறினால் எதிரணிக்கு 5 ரன்கள் கூடுதலாக நடுவர்கள் வழங்கி நடவடிக்கை எடுப்பார்கள்.

அதேபோல், ஆண், பெண் என்ற வேறுபாடு இன்றி நடுவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும்.

மைதானம் மோசமாக இருந்தால் தரம் குறைப்பு பள்ளி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் 5 புள்ளியை ஒரு மைதானம் எட்டினால், அதற்கு வழங்கப்பட்ட சர்வதேச அங்கீகாரம் ரத்து செய்யப்படும். இனி அந்த புள்ளி எண்ணிக்கை 6 ஐ எட்டினால் மட்டுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி