Ind vs Aus 2nd T20 match லைவ் ஸ்ட்ரீமிங் விவரங்கள்
Nov 26, 2023, 11:52 AM IST
இந்திய அணியில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நவம்பர் 26ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற பிறகு, திருவனந்தபுரத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டீம் இந்தியா வென்றால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும்.
டி20 தொடருக்கான இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங் , ஜிதேஷ் சர்மா (Wk), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி
மேத்யூ வேட் (கேப்டன்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் , கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம்.
எப்போது, எங்கு பார்க்க வேண்டும்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா 2வது டி20 சர்வதேச போட்டி ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் கலர்ஸ் சினிப்ளெக்ஸில் நேரடியாக ஒளிபரப்பப்படும். போட்டியின் லைவ் ஸ்ட்ரீமிங் ஜியோசினிமா ஆப் மற்றும் இணையதளத்தில் இரவு 7 மணி முதல் கிடைக்கும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா டி20 தொடர் அட்டவணை:
நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் டி20 தொடர் விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கவுகாத்தி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய ஐந்து மைதானங்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டிக்கான தேதிகள் மற்றும் இடங்களின் பட்டியல் இங்கே.
இந்தியா vs ஆஸ்திரேலியா 1வது டி20: விசாகப்பட்டினம்
இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டி20: நவம்பர் 26 திருவனந்தபுரம்
இந்தியா - ஆஸ்திரேலியா 3வது டி20: நவம்பர் 28ம் தேதி கவுகாத்தி
இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டி20: டிசம்பர் 1ம் தேதி நாக்பூர்
இந்தியா - ஆஸ்திரேலியா 5வது டி20: டிசம்பர் 3ம் தேதி ஹைதராபாத்
முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஜோஷ் இங்கிலிஸ் (110) சதம் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் (52) அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 208/3 ரன்களை எடுக்க உதவியது, பிரசித் கிருஷ்ணா (1/50), ரவி பிஷ்னோய் (1/54) ஆகியோர் இந்திய அணியில் விக்கெட் வீழ்த்தினர். 209 ரன்களை சேஸிங் செய்த சூர்யகுமார் யாதவ் (80), இஷான் கிஷன் (58), ரின்கு சிங் (22*) ஆகியோர் சிறப்பாக ஆடி இந்திய அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.
இத்தொடரின் இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
டாபிக்ஸ்