தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Sl 3rd Odi: இலங்கை பேட்டிங்கை ஆட்டம் காண வைத்த இந்திய ஸ்பின்னர்கள்..ரியான் பராக் கலக்கல் பவுலிங்

IND vs SL 3rd Odi: இலங்கை பேட்டிங்கை ஆட்டம் காண வைத்த இந்திய ஸ்பின்னர்கள்..ரியான் பராக் கலக்கல் பவுலிங்

Aug 08, 2024, 05:22 PM IST

google News
பகுதி நேர பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்ட ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல் பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு இந்திய ஸ்பின்னர்கள் இலங்கை பேட்டிங்கை ஆட்டம் காண வைத்துள்ளனர். (PTI)
பகுதி நேர பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்ட ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல் பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு இந்திய ஸ்பின்னர்கள் இலங்கை பேட்டிங்கை ஆட்டம் காண வைத்துள்ளனர்.

பகுதி நேர பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்ட ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கலக்கல் பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். நான்கு இந்திய ஸ்பின்னர்கள் இலங்கை பேட்டிங்கை ஆட்டம் காண வைத்துள்ளனர்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக வென்றது.

இதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி டை ஆன நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு நாள் தொடருக்கான வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகிறது. 1997க்கு பிறகு இலங்கை அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றதே இல்லை.

இந்த போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுல், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பதிலாக ரிஷப் பண்ட், ரியான் பராக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் இலங்கை அணியில் அகிலா தனஞ்ஜெயாவுக்கு பதிலாக மகேஷ் தீக்‌ஷனா சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை பேட்டிங்

இதையடுத்து முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்துள்ளது. இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்துள்ளது.

அதிகபட்சமாக அவிஷ்கா பெர்ணான்டோ 96, குசால் மெண்டிஸ் 59, நிசங்கா 45 ரன்கள் அடித்தனர்.

இந்திய பவுலர்களில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

நல்ல பார்ட்னர்ஷிப்

இலங்கை அணிக்க நல்ல தொடக்கத்தை ஓபனர்களான நிசங்கா - அவிஸ்கா பெர்ணான்டோ ஆகியோர் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 19.5 ஓவரில் 89 ரன்கள் சேர்த்தனர்.

முதல் விக்கெட்டாக நிசங்கா, அக்சர் படேல் சுழலில் சிக்கி அவுட்டானார். இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த குசால் மெண்டிஸ், ஓபனர் பெர்ணான்டோவுடன் இணைந்து சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 82 ரன்கள் சேர்த்தனர்.

டாப் மூன்று பேட்ஸ்மேன்கள் அவுட்டான பிறகு மற்றவர்கள் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபட தவறினர்.

பவுலிங்கில் கலக்கிய பராக்

கூடுதல் பேட்ஸ்மேனாகவும், பகுதி நேர பந்து வீச்சாளராகவும், பிரதான பவுலர் அர்ஷ்தீப்புக்கு பதிலாக சேர்க்கப்பட்டார் ரியான் பராக்.

இதற்கு கை மேல் பலன் அளிக்கும் விதமாக அவர் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். நான்கு ஸ்பின்னர்களை பயன்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, இலங்கை பேட்டிங் ஆர்டரை ஆட்டம் காண வைத்துள்ளார். இந்த போட்டியில் மொத்தம் 37 ஓவர்கள் ஸ்பின்னர்களால் வீசப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி