Ind vs SL 1st T20 Result: பவுலிங்கில் கலக்கிய ரியான் பராக்..! அடித்து ஆடி கடைசியில் அடிபணிந்த இலங்கை
Jul 27, 2024, 11:52 PM IST
பேட்டிங்கில் சொதப்பனாலும் பவுலிங்கில் கலக்கிய ரியான் பராக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடித்த அடி அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கிய பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அடிபணிந்தது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. இந்திய டி20 அணியில் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ், புதிய பயிற்சியாளரான கெளதம் கம்பீர் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் களமிறங்கும் முதல் போட்டியாக இது அமைந்தது.
இந்தியா ரன் குவிப்பு
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 58, ரிஷப் பண்ட் 49, யஷஸ்வி ஜெயஸ்வால் 40, சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்தனர்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி மிகப் பெரிய ஸ்கோரை குவித்துள்ளது.
இலங்கை பவுலர்களில் மதிஷா பதிரனா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தில்சான் மதுஷங்கா, வனிந்து ஹசரங்கா, அசித பெர்ணாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
இலங்கை சேஸிங்
இதையடுத்து 214 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இலங்கை 19.2 ஓவரில் 170 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் இந்தியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணியில் ஓபனர் பதும் நிசங்கா 79, குசால் மெண்டிஸ் 45, குசால் பெராரே 20, கமிந்து மென்டிஸ் 12 ரன்கள் அடித்தனர். மற்ற ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
இந்தியா பவுலர்களில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
ஓபனர்கள் அதிரடி தொடக்கம்
இந்திய ஓபனர்களை போல் இலங்கை அணியின் ஓபனர்களான பதும் நிசங்கா -குசால் மெண்டிஸ் ஆகியோர் அதிரடியான ஓபனிங்கை கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 84 ரன்கள் சேர்த்தனர்.
முதல் விக்கெட்டாக அவுட்டான குசால் மெண்டிஸ் 27 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். மற்றொரு ஓபனரான நிசங்கா தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தி அரைசதமடித்தார்.
இந்திய பவுலர்கள் பந்துவீச்சில் வானவேடிக்க நிகழ்த்திய நிசங்கா 48 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
கொத்தாக வெளியேறி இலங்கை பேட்ஸ்மேன்கள்
ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 25 பந்துகளுக்கு 56 ரன்கள் தேவை, கைவசம் 6 விக்கெட்டுகள் இலங்கை அணியிடம் இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இலங்கை பேட்ஸ்மேன்கள் அடித்த ஆட முயன்று தவறான ஷாட்களால் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
டாப் நான்கு பேட்ஸ்மேன்களை தவிர மீதமிருந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்ரை இலக்கத்தில் நடையை கட்டினர். மூன்று பேர் டக்அவுட்டானார்கள்.
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்த இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்