தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Icc: ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் வருகிறது Stop Clock விதிமுறை! இனி பவுலிங் டீமுக்கு உருவாகும் சிக்கல்

ICC: ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் வருகிறது Stop Clock விதிமுறை! இனி பவுலிங் டீமுக்கு உருவாகும் சிக்கல்

Nov 22, 2023, 05:18 PM IST

google News
வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளான ஒரு நாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையாக Stop Clock விதிமுறையை சோதனை முயற்சியாக ஐசிசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. (AP)
வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளான ஒரு நாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையாக Stop Clock விதிமுறையை சோதனை முயற்சியாக ஐசிசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளான ஒரு நாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையாக Stop Clock விதிமுறையை சோதனை முயற்சியாக ஐசிசி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வெள்ளை பந்த கிரிக்கெட் விளையாட்டான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக மூன்றாவது முறை எடுத்துக்கொண்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்பந்து விளையாட்டை போல்ICC new rule கிரிக்கெட்டிலும் ஸ்டாப் கிளாக் நடைமுறை அமலுக்கு வருகிறது.

2024 ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னர் சோதனை முயற்சியாக இதனை ஐசிசி செய்கிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரை வீச தொடங்கவில்லை என்றால், அந்த ஓவருக்கு 30 யார்ட் வளையத்துக்குள் வெளியில் இருக்கும் ஒரு ஃபீல்டரை உள்ளே அழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி