தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Yashasvi Jaiswal: 'பயமின்றி பந்துவீச்சை எதிர்கொண்டேன்'-ஆட்டநாயகன் விருது வென்ற யஷஸ்வி பேட்டி

Yashasvi Jaiswal: 'பயமின்றி பந்துவீச்சை எதிர்கொண்டேன்'-ஆட்டநாயகன் விருது வென்ற யஷஸ்வி பேட்டி

Manigandan K T HT Tamil

Nov 27, 2023, 10:58 AM IST

google News
Ind vs Aus 2nd t20: ‘என்னை இயல்பாக விளையாடச் செல்லுமாறு சூர்யகுமார் யாதவ் மற்றும் விவிஎஸ் சார் கூறினர்.’ (PTI)
Ind vs Aus 2nd t20: ‘என்னை இயல்பாக விளையாடச் செல்லுமாறு சூர்யகுமார் யாதவ் மற்றும் விவிஎஸ் சார் கூறினர்.’

Ind vs Aus 2nd t20: ‘என்னை இயல்பாக விளையாடச் செல்லுமாறு சூர்யகுமார் யாதவ் மற்றும் விவிஎஸ் சார் கூறினர்.’

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அச்சமின்றி இயல்பாக விளையாட முயற்சித்தேன் என அவர் தெரிவித்தார்.

ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்கள் இந்தியாவை 235 ரன்களை குவிக்க வைத்தது. இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூறுகையில், "இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எனது எல்லா ஷாட்களையும் விளையாட முயற்சித்தேன். எனது முடிவுகளில் நான் உறுதியாக இருந்ததால் அச்சமின்றி இருக்க முயற்சித்தேன்

தலைமைப் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எனது ஸ்டைலில் விளையாடுவதற்கு ஆதரவளித்தனர்.

என்னை இயல்பாக விளையாடச் செல்லுமாறு சூர்யகுமார் யாதவ் மற்றும் விவிஎஸ் சார் கூறினர். எனது திறமையை வெளிப்படுத்துமாறு அவர்கள் கூறினர்.

என்னைப் பொறுத்தவரை, நான் அடுத்தகட்டத்தை நோக்கி வளர முடியும் என்று நம்புகிறேன், நான் வேறு எதையும் பற்றி யோசிக்கவில்லை. நான் இன்னும் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார் ஜெய்ஸ்வால்.

டெத் ஓவரில் பேட்டிங் செய்ய பயிற்சி எடுக்கிறேன்: ரிங்கு

ரிங்கு 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து 344 ஸ்டிரைக் ரேட்டில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு அவரது பங்களிப்பு அவசியமாக இருந்தது.

இதுபோன்ற சூழ்நிலைகளை மனதில் கொண்டு பயிற்சி எடுத்து வருவதாக ரிங் சிங் போட்டிக்கு பிறகு கூறினார்.

"நான் டெத் ஓவரில் சூழ்நிலையை கையாள நிறைய பேட்டிங் பயிற்சி செய்கிறேன். எனவே, இந்த நிலையை அறிந்து அமைதியாக இருக்கிறேன். சில நேரங்களில் எனக்கு 5-6 ஓவர்கள் (பேட் செய்ய) அல்லது சில சமயங்களில் இரண்டு ஓவர்கள் கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும்.

வி.வி.எஸ் லஷ்மண் சார் கூட வலைப் பயிற்சியில் டெத் ஓவர்களில் விளையாடுவதற்கு பயிற்சி எடுக்கச் சொல்லியிருக்கிறார்” என்றார் ரிங்கு.

அவர் மேலும், “ஒவ்வொரு பந்தையும் கூர்ந்து நோக்கி எதிர்கொள்கிறேன். இது மெதுவான பந்தா அல்லது வேகமான பந்தா என்பதை நான் கவனிக்க முயற்சிக்கிறேன், அதற்கேற்ப நான் விளையாடுகிறேன்'' என்றார் ரிங்கு சிங்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி