தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hardik Pandya: காயத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பாண்ட்யா! மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு

Hardik Pandya: காயத்தால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகிய பாண்ட்யா! மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் சேர்ப்பு

Nov 04, 2023, 04:48 PM IST

google News
இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கான மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். (Hardik Pandya-X)
இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கான மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கான மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை 2023 தொடரில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. எஞ்சிய இரண்டு போட்டிகளில் தென் ஆப்பரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.

தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக இந்தியா மோதும் போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதற்கிடையே வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், பவுலிங் செய்தபோது இடது கணுக்காலில் காயமடைந்தார் இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், துணை கேப்டனுமான ஹர்திக் பாண்ட்யா.

30 வயதாகும் பாண்ட்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், நாக்அவுட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏற்ப முழுமையான பிட்னஸ் பெறுவதற்கு அவர் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியை மிஸ் செய்தார். பாண்ட்யாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி தனது அதிரடியான பவுலிங்கால் இந்தியாவின் வெற்றி பயணத்தை தொடர காரணமாக அமைந்தார். அவர் மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும், இரண்டு முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதையடுத்து பாண்ட்யா தற்போது காயம் மற்றும் பிட்னஸ் காரணங்களால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஐசிசி போட்டி தொழில்நுட்ப கமிட்டியின் ஒப்புதலை பெற்ற பிறகு மாற்று வீரராக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

27 வயதாகும் பிரசித் கிருஷ்ணா 17 ஒரு நாள் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியா அணி தனது அடுத்த போட்டியில் தென் ஆப்பரிக்காவை நவம்பர் 5ஆம் தேதியும், கடைசி போட்டியில் நெர்லாந்து அணியை நவம்பர் 12ஆம் தேதி எதிர்கொள்கிறது. இந்தியா தனது கடைசி போட்டியில் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் விளையாடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி