தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  செத்துப்போன பிட்ச்..அவன் பொருள வச்சே போட்டு தாக்கு! பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பல சாதனைகள் புரிந்த இங்கிலாந்து

செத்துப்போன பிட்ச்..அவன் பொருள வச்சே போட்டு தாக்கு! பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பல சாதனைகள் புரிந்த இங்கிலாந்து

Oct 12, 2024, 07:20 PM IST

google News
பவுலர்களுக்கு உதவாத சொத்துப்போன பிட்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பல சாதனைகள் புரிந்த இங்கிலாந்து முதல் டெஸ்ட் வெற்றியும் பெற்றுள்ளது. முல்தான் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிகழ்த்திய சாதனைகளை என்னென்ன என்பதை பார்க்கலாம் (AFP)
பவுலர்களுக்கு உதவாத சொத்துப்போன பிட்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பல சாதனைகள் புரிந்த இங்கிலாந்து முதல் டெஸ்ட் வெற்றியும் பெற்றுள்ளது. முல்தான் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிகழ்த்திய சாதனைகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்

பவுலர்களுக்கு உதவாத சொத்துப்போன பிட்ச்சில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்தி பல சாதனைகள் புரிந்த இங்கிலாந்து முதல் டெஸ்ட் வெற்றியும் பெற்றுள்ளது. முல்தான் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிகழ்த்திய சாதனைகளை என்னென்ன என்பதை பார்க்கலாம்

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தான் நகரில் அக்டோபர் 7 முதல் 11 வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 556 ரன்கள் அடித்தது. ஆனால் அந்த ஸ்கோரை விட முன்னிலை பெற்ற இங்கிலாந்து 823 ரன்கள் என மிக பெரிய ஸ்கோரை எடுத்தது. இங்கிலாந்து இன்னிங்ஸில் ஹாரி புரூக் 317, ஜோ ரூட் 262 ரன்கள் எடுத்தனர். அத்துடன் இவர்கள் இருவரும் 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

செத்துப்போன பிட்ச்

பவுலர்களுக்கு எந்த வகையில் உதவாமல் இருந்த இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் முழுக்க ஆதிக்க செலுத்தினர். குறிப்பாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டி போல் அல்லாமல் ஒரு நாள் போட்டி போல் அதிரடியாக விளையாடினர். 150 ஓவரில் 5.48 ரன்ரேட்டில் அவர் 823 ரன்களை குவித்தனர்.

பவுலர்களுக்கு உதவாத வகையில் செத்துப்போன பிட்ச் ஆக இருந்த போதிலும், இந்த ஆடுகளத்தில் இங்கிலாந்து பவுலர்கள் துல்லியமாக பந்து வீசி போட்டியை தங்கள் அணி பக்கம் திருப்பி வெற்றியும் பெற்றனர்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

உள்ளூர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 550 ரன்களை விட்டுக்கொடுத்து, 200 ரன்களுக்கு மேல் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்ற எதிரணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 500 ரன்களுக்கு மேல் குவித்து ஒரு இன்னிங்ஸ் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது பாகிஸ்தான்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் 823/7d ஸ்கோர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அடிக்கப்பட்ட நான்காவது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராக உள்ளது. அத்துடன் 21வது நூற்றாண்டில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகவும், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது அமைந்துள்ளது

இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் 317 ரன்களை எடுத்தார். அந்நிய மண்ணில் 300+ ஸ்கோர் ஸ்கோர் அடித்த 5 அல்லது அதற்கு குறைவான ஆர்டரில் களமிறங்கிய பேட்ஸ்மேனாக உள்ளது. அத்துடன் ப்ரூக் டெஸ்டில் இரண்டாவது அதிவேக டிரிபிள் சதத்தைப் பெற்றார். அத்துடன் பாகிஸ்தானில் களமிறங்கிய தனது முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே பேட்டர் என்ற பெருமையும் பெற்றார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஓபனருமான அலெஸ்டர் குக் 12,472 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக உள்ளார். இதை முறியடித்துள்ள ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஆகியுள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 35வது சதத்தை அடித்திருக்கும் அவர், அதிக டெஸ்ட் சதமடித்தவர்கள் லிஸ்டில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக்கின் இணைந்து 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் அதிகபட்ச பார்டனர்ஷிப்பாக அமைந்துள்ளது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் இதுவே அதிகபட்சமாகும்.

இங்கிலாந்து பேட் செய்த 150 ஓவர் இன்னிங்ஸில், ஒரே ஒரு மெய்டன் மட்டுமே வீசப்பட்டது. இதன் மூலம் நீண்ட இன்னிங்கிஸில் குறைவான மெய்டன்கள் வீசப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி