HBD Robin Singh: தோனிக்கு முன் பினிஷராக இருந்தவர்..பீல்டிங்கில் வயதான வாலிபன் - இந்திய கிரிக்கெட்டின் ப்யூர் ஆல்ரவுண்டர்
Sep 14, 2024, 06:00 AM IST
HBD Robin Singh: தோனிக்கு முன் பினிஷராக இருந்தவர், பீல்டிங்கில் வயதான வாலிபன் போல் செயல்பட்டவர் 1990 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியிந் ப்யூர் ஆல்ரவுண்டராக திகழ்ந்தார் ராபின் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1989 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் விளையாடிய ப்யூர் ஆல்ரவண்டர் ராபின் சிங். பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், களத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரராக இருந்து வந்த ராபின் சிங், கபில் தேவ் மற்றும் தோனி ஆகியோருக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் உயிரை கொடுத்து விளையாடி பல போட்டிகளில் இந்திய அணிக்காக வெற்றியை பெற்ற தந்த வீரராக திகழ்ந்தார்.
இடது கை பேட்ஸ்மேனாகவும், மிடில் ஓவர்களை வீசும் மித வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்த ராபின் சிங், இந்தியாவின் ஜாண்டி ரோட்ஸ் என சொல்லும் அளவில் பீல்டில் டைவ் அடித்தும், பறந்தும் பந்தை பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.
தமிழ் பூர்வீகம்
ராபின் சிங் பிறந்தது வெஸ்ட் இண்டீஸ் இருக்கும் டிரினிடாட் மற்றும் டோபாக்கோவாக இருந்தாலும் அவரது தந்தையான ராமநாரைன் தமிழ்நாட்டில் இருந்து அங்கு போய் செட்டில் ஆனவராகவும், தாயார் சாவித்ரி சிங் ராஜ்ஸ்தானை சேர்ந்தவராகவும் இருந்தார்கள்.
டீன் ஏஜ் வயதில் மெட்ராஸ் வந்த அவர், கல்லூரி படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் தான் முடித்தார்.
கிரிக்கெட் பயணம்
1982 காலகட்டத்தில் டிரினிடாட் யூத் கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார் ராபின் சிங். இதன் பின்னர் 1985 சீசனில் தனது தமிழ்நாடு அணிக்காக ரஞ்சி கோப்பையில் களமிறங்கினார். அந்த சீசனில் 33 ஆண்டுகள் கழித்து தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையை வென்றது. தமிழ்நாடு அணிக்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியிருக்கும் ராபின் சிங் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களும், 172 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் என்ட்ரி
தான் பிறந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் ராபின் சிங் 1989இல் அறிமுகமானார். இந்த தொடரில் இரண்டு போட்டிகள் விளையாடினார். அதன் பின்னர் இவரை அப்படி இந்திய அணி நிர்வாகம் கழட்டி விட்டது.
பின்னர் 7 ஆண்டுகளுக்கு பிறகு 1996இல் நடந்த டைட்டன் கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்தார். இந்த தொடருக்கு பின்னர் 2001இல் ஓய்வு பெறும் வரையில் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக அங்கம் வகித்தார்.
ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்யும் வரிசையில், குறிப்பாக 40 ஓவர்களுக்கு மேல் முக்கிய கட்டத்தில் களமிறங்கு ராபின் சிங் ஏராளமான கேமியோ இன்னிங்ஸ் மூலம் அணியை காப்பாற்றியுள்ளார். முதல் பேட்டிங்காக இருந்தாலும் சரி, சேஸிங் என்றாலும் சரி ராபின் சிங் களத்தில் இருக்கும்போது ரன்கள் என்பது இடைவிடாது வந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை விதைத்தவராக இருந்துள்ளார்.
1999 உலகக் கோப்பை தொடரில் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக ஜொலித்த ராபின் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கினார்.
பயிற்சியாளர் பயணம்
நல்ல பார்மில் இருந்தபோதிலும் 33 வயதில் அணிக்குள் நுழைந்த அவரால் நீண்ட காலம் நீடித்து இருக்க முடியவில்லை. இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக ஓய்வு பெற்றார்.
ஆனாலும் தொடர்ந்து பயிற்சியாளராக தனது பணியை மேற்கொண்டார். இந்தியாவின் யு19 கிரிக்கெட் அணிக்காக தொடங்கிய அவரது பயிற்சியாளர் பயணம், ஹாங்காங் கிரிக்கெட் அணி, இந்தியா ஏ, ஐபிஎல் கிரிக்கெட்டில் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்தியா முதல் டி20 உலகக் கோப்பை வென்ற தோனி தலைமையிலான இளம் அணியில் இவர்தான் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். தோனிக்கு முன் பினிஷராக இருந்தவர், பீல்டிங்கில் வயதான வாலிபன் போல் செயல்பட்டவர் 1990 காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியிந் ப்யூர் ஆல்ரவுண்டராக திகழ்ந்தார் ராபின் சிங்குக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்