தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Hbd Stephen Fleming: நியூசிலாந்துக்கு முதல் ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்! சிஎஸ்கே, தோனி வெற்றிக்கு நிழலாக இருப்பவர்

HBD Stephen Fleming: நியூசிலாந்துக்கு முதல் ஐசிசி கோப்பை வென்ற கேப்டன்! சிஎஸ்கே, தோனி வெற்றிக்கு நிழலாக இருப்பவர்

Apr 01, 2024, 06:50 AM IST

google News
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அந்த அணிக்கு முதல் ஐசிசி கோப்பை பெற்று தந்ததோடு மட்டுமில்லாமல், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியதிலும் பெரும் பங்கு வகித்தவர் ஸ்டீபன் பிளெமிங்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அந்த அணிக்கு முதல் ஐசிசி கோப்பை பெற்று தந்ததோடு மட்டுமில்லாமல், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியதிலும் பெரும் பங்கு வகித்தவர் ஸ்டீபன் பிளெமிங்.

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனாக அந்த அணிக்கு முதல் ஐசிசி கோப்பை பெற்று தந்ததோடு மட்டுமில்லாமல், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியதிலும் பெரும் பங்கு வகித்தவர் ஸ்டீபன் பிளெமிங்.

இந்திய கிரிக்கெட்டில் தோனி எப்படியோ, அதுபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் இவரது பெயர் தவிர்க்க முடியாததாக உள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன், அந்த அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகள் விளையாடிய இரண்டாவது வீரர், வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன், நியூசிலாந்தின் முதல் சர்வதேச டி20 போட்டியின் கேப்டன் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருப்பவர் ஸ்டீபன் பிளெமிங்.

நியூசிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டன்

இடது கை பேட்ஸ்மேனும், பார்டைம் மித வேகப்பந்து வீச்சாளருமான ஸ்டீபன் பிளெமிங் நியூசிலாந்து அணிக்காக 1994 முதல் 2008 வரை டெஸ்ட், வெள்ளை பந்து போட்டிகளில் விளைாடியுள்ளார்.

1994இல் இந்தியாவுக்கு எதிராக உள்ளூரில் நடைபெற்ற தொடரில் தான் அறிமுகமானார் பிளெமிங். ஒரே நேரத்தில் டெஸ்ட், ஒரு என இரு தொடர்களிலும் அறிமுகம் வீரராக களமிறங்கு முதல் போட்டியில் 90 ரன்களுக்கு மேல் அடித்து தன் பக்கம் கவனத்தை ஈர்த்தார்.

23 வயதிலேயே நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிளெமிங், அந்த அணியின் இளம் கேப்டன் என்ற பெருமை பெற்றார். 1998 காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு இருந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு வெண்கல பதக்கத்தை பெற்று தந்தார்.

முதல் ஐசிசி கோப்பை

ஐசிசி நாக்அவுட் கோப்பை 2000ஆவது ஆண்டில் நடைபெற்றது. இதில் கங்குலி தலைமையிலான இந்தியாவை இறுதிப்போட்டியில் வீழ்த்தி நியூசிலாந்துக்கு முதல் ஐசிசி கோப்பையை வென்று கொடுத்தார். கத்துக்குட்டியாக இருந்த நியூசிலாந்து அணியை சவால் மிக்க அணியாக உருமாற்றியத்தில் பிளெமிங் முக்கிய பங்கு வகித்தார்.

சிஎஸ்கே வெற்றியின் டானிக்

2008இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிளெமிங் அந்த ஆண்டில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பேட்ஸ்மேனாக விளையாடினார். இதன் பின்னர் 2009இல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக மாறினார்.

அப்போது முதல் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் பிளெமிங், தோனியின் மாஸ்டர் மைண்டாகவே செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் தோனியின் வெற்றிக்கு நிழலாக இருந்து செயல்படுவராக உள்ளார். தன்னை போலவே மிகவும் கூலான நபராக இருந்து வருவதாலோ என்னவே, தோனிக்கும், இவருக்குமான கெமிஸ்ட்ரி சிஎஸ்கேவின் சக்சஸ் பார்முலாவாக மாறியுள்ளது.

சிஎஸ்கே வென்ற 5 ஐபிஎல் கோப்பை, 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கு பிளெமிங்கின் பங்கு மகத்தானதாக உள்ளது.

சிஎஸ்கேயின் மற்ற டி20 லீக் அணிகளான SA20 லீக்கில் விளையாடும் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ், மேஜர் கிரிக்கெட் லீக்கில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகளின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

பிளெமிங் சாதனைகள்

நியூசிலாந்து கேப்டனாக டெஸ்ட் (28), ஒரு நாள் (98) போட்டிகளில் அதிக வெற்றிகள், விக்கெட் கீப்பராக இல்லாமல் சர்வதேச போட்டிகளில் 300 கேட்ச்கள் பிடித்த வீரர், டெஸ்ட் (46), ஒரு நாள் (49) போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன், நியூசிலாந்துக்காக அதிக போட்டிகள் விளையாடியவர் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் வெற்றிக்கும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமான அணியாக வலம் வருவதற்கும் பங்காற்றிய ஸ்டீபன் பிளெமிங் பிறந்தநாள் இன்று.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி