DC vs LSG Result: பார்ட்னர்ஷிப் அமையாமல் ஒற்றை ஆளாக நின்ற நிக்கோலஸ் பூரான்! ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் லக்னோ
May 15, 2024, 02:10 PM IST
லக்னோ அணியின் பவுலரான அர்ஷத் கான், பேட்டிங்கில் அதிரடி காட்டி அரைசதமடித்தார். மிடில் ஆர்டரில் அடித்து விளையாடிய போதிலும் பார்ட்னர்ஷிப் அமையாமல் நிக்கோலஸ் பூரான் ஒற்றை ஆளாக நின்றார். தோல்வியை தழுவியதால் ப்ளேஆஃப் வாய்ப்பை இழக்கும் சூழலில் லக்னோ சிக்கியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 64வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று 12 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்தது. இரு அணிகளும் ஒரே புள்ளிகளில் இருந்ததால், வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற நிலையில் இருந்தது.
டெல்லி அணியில் ஒரு போட்டி தடைக்கு பின் ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடுகிறார். வார்னருக்கு பதிலாக குலாப்தீன் நயீப் சேர்க்கப்பட்டுள்ளார். லக்னோ அணியில் அர்ஷத் கான், யுத்வீர் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெல்லி ரன் குவிப்பு
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 57, ஷாய் ஹோப் 38, ரிஷப் பண்ட் 33 ரன்கள் அடித்துள்ளனர். லக்னோ பவுலர்களில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அர்ஷத் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
லக்னோ சேஸிங்
209 ரன்களை சேஸ் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அத்துடன் முதல் அணியாக லீக் சுற்று போட்டிகளை 7 வெற்றியுடன் நிறைவு செய்தது. இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து டெல்லி கேபிடல்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பு அமையலாம்
இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கலீல் அகமது, அக்ஷர் படேல், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
நிக்கோலஸ் பூரான் போராட்டம்
லக்னோ அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் டெல்லி பவுலர்களின் துல்லிய பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள்.
ஓபனர்கள் குவன்டைன் டி காக் 12, கேஎல் ராகுல் 5, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 5, தீபக் ஹூடா 0 என அவுட்டானார்கள்.
பார்ட்னர்ஷிப் அமையாதபோதிலும் ஒற்றை ஆளாக அதிரடி காட்டி விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்தார் நிக்கோலஸ் பூரான். 20 பந்துகளில் அரைசதமடித்தார். 27 பந்துகளில் 61 ரன்கள் அடித்த பூரான், முகேஷ் குமார் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.
அர்ஷத் கான் அதிரடி
பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிவிட்டாலும் பவுலரான அர்ஷத் கான், டெல்லி கேபிடல்ஸ் பவுலர்களை அடித்து துவைத்தார். தன் பங்குக்கு அதிரடியில் மிரட்டிய அவர் 25 பந்துகளில் அரைசதத்ை பூர்த்தி செய்தார். 33 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவர் தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.