தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Aus Vs Afg: இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல்.. 7விக்கெட்டுக்குப் பின்பும் எழுச்சி.. ஆப்கனை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா

Aus vs AFG: இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல்.. 7விக்கெட்டுக்குப் பின்பும் எழுச்சி.. ஆப்கனை அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா

Marimuthu M HT Tamil

Nov 07, 2023, 11:19 PM IST

google News
ஆப்கனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது, ஆஸ்திரேலிய அணி. (AP)
ஆப்கனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது, ஆஸ்திரேலிய அணி.

ஆப்கனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது, ஆஸ்திரேலிய அணி.

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய 39வது போட்டியில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிற்பகல் 2:00 மணிக்கு இந்திய நேரப்படி களமிறங்கின. 1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் ஜெயித்த ஆப்கன், பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆப்கன் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்களைக் குவித்தது. 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாண்டது. 

அதில், ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 18 ரன்கள் எடுத்தும், டிராவிஸ் ஹெட் டக் அவுட்டும் ஆகினர். மூன்றாவது வீரராக களமிறங்கிய மார்ஸ் 24 ரன்களுக்கும், அடுத்துவந்த மார்னஸ் 14 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இந்நிலையில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஜோஸ் இங்கிலிஷ் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்,ஆறாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் அணியின் ஸ்கோரை நிதானமாக ஆடி உயர்த்தினார். அடுத்தடுத்து வந்த ஆட்டக்காரர்களான மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆறு ரன்களுக்கும் மிட்செல் ஸ்டார்க் மூன்று ரன்களுக்கும் அவுட்டாகி ஆஸ்திரேலிய அணி மிகப்பெரிய சரிவில் இருந்தது. இந்நிலையில் மேக்ஸ்வெல் இப்போட்டியில், இரட்டை சதத்தைப் பதிவு செய்து, 201 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.மறுமுனையில், பவுலரான ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பட் கம்மின்ஸ் 68 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து மேக்ஸ்வெல்லை ஆடவிட்டார். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளுக்கு 150 ரன்களைக்கூட அடையாமல் தவித்த ஆஸ்திரேலிய அணி மேக்ஸ்வெல்லின் எழுச்சியால் நிர்ணயிக்கப்பட்ட ஓவரை விட குறைவாக 46.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்களை எடுத்து அபார வெற்றிபெற்றது. ஆப்கனை வீழ்த்தியதன் மூலம் மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது, ஆஸ்திரேலிய அணி. முன்னதாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தன.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் ஆப்கனுக்கு எதிராகப் பந்துவீசிய ஆஸ்திரேலிய வீரர் ஹேஸில்வுட் 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் எடுத்தார்.ஆடம் ஜாம்பாவுக்கு 1 விக்கெட் கிடைத்தது.  

அதேபோல், முதலில் ஆடிய  ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். 3 சிக்ஸர்களையும் பறக்க விட்டார். உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை இப்ராஹிம் ஜத்ரான் பெற்றார். ரஹ்மனுல்லா குர்பாஸ் 21 ரன்களிலும், ரஹ்மத் ஷா 30 ரன்களிலும் நடையைக் கட்டினர். கேப்டன் ஷாஹிதி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒமர்ஜாய் 22 ரன்கள், முகமது நபி 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.  இறுதியாக ஆப்கன் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 291 ரன்களைக் குவித்தது.

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை கைப்பற்றினார். தவிர, இரட்டை சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவியதால், மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வுஆனார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.
அடுத்த செய்தி