Ravichandran Ashwin: மேத்யூஸ் போல் எனக்கும் ஒரு முறை நடந்தது! ஆனால் நான் எஸ்கேப் ஆகிட்டேன் - அஸ்வின் கூறும் பிளாஷ்பேக்
Nov 10, 2023, 05:20 PM IST
களத்தினுள் வந்த பேட் செய்ய முடியாமல் அவுட் என வெளியேறுவது யாராக இருந்தாலும் மோசமாகத்தான் உணர்வார்கள். எனக்கும் ஒரு முறை இப்படி நடந்திருக்க கூடும். ஆனால் நான் தப்பித்துவிட்டேன் என்று மேத்யூஸ் டைம்ட் அவுட் விக்கெட் குறித்து இந்திய அணியின் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2023 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது போல், திருப்புமுனையை ஏற்படுத்தும் விதமாக சில சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
கடந்த திங்கள் கிழமை இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில், இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பட்ட நேரத்துக்குள் களத்துக்கு பேட் செய்ய வராத காரணத்தால் டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விவாத பொருளாகவும் மாறியுள்ளது. இந்த விஷயத்தில் அவுட் கொடுக்கப்பட்டதால் பேட் செய்யாமல் ஏமாற்றத்துடன் சென்ற மேத்யூஸ், அப்பீல் செய்த வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹாசன் என இருவரும் தங்களது தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து இந்த அவுட் முறை குறித்து இந்திய அணியின் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது: “ஒரு பக்கம் கிரிக்கெட் விதிகள், இன்னொரு பக்கம் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் ஸ்பிரிட் பற்றி பேசுகிறார்கள்.
மேத்யூஸ் களத்தின் உள்ளே வந்தபோது அவரது ஹெல்மெட் சரியில்லை என்று புது ஹெல்மெட் கேட்டார். இன்னொரு விடியோவில் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹாசன், இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் கார்ட் எடுத்து விளையாட தாமதமானது. அந்த போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடினார்.
உண்மையில் ஷாகிப் மேல்முறையீடு செய்த நிலையிலேயே, நடுவர்கள் அவுட் கொடுத்தார்கள். மேத்யூஸ்க்கு ஏற்கனவே கள நடுவர்கள் எச்சரிக்கை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் அவுட் செய்யப்பட்டதில் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். அந்த விதத்தில் யார் அவுட் ஆகியிருந்தாலும் அதை மோசமாகத்தான் உணர்வார்கள்.
இந்த பிரச்சனையில் ஷாகிப் மற்றும் மேத்யூஸ் இருவருமே சரியாகத்தான் சொன்னார்கள். ஒருவருக்கும் விதி தெரியும். இன்னொருவருக்கு ஹெல்மெட் சரியில்லை. அவர் அதே ஹெல்மெட்டில் எப்படி விளையாட முடியும் என்று கேட்டார். இதில் பாதிக்கப்பட்ட தரப்பு நிச்சயமாக ஆட்டம் இழந்து வெளியே சென்ற மேத்யூஸ் தரப்புதான்.
இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், அன்றைய நாளின் கடைசி ஓவராக இருக்ககூடும் என கருதி நான் மெதுவாக களத்தினுள் சென்றேன். ஆனால் நடுவர் என்னிடம், 'நீங்கள் சற்று தாமதமாக கிரீஸுக்கு வந்தீர்கள். அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தால் அவுட் கொடுத்திருப்பேன் தெரியுமா?' என கூறுயதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். எனவே இந்த அவுட் குறித்து பல அணிகள் இன்னும் அறிந்திருக்கவில்லை"
இவ்வாறு அவர் கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்