HT Yatra: தாயாருக்கு இரண்டு சன்னதி.. தோகை விரித்து ஆடிய பார்வதி.. அழகிய உருவெடுத்த சுந்தரேஸ்வரர்
May 21, 2024, 09:24 AM IST
Thirumailadi Arulmigu Sundareswarar: ஒவ்வொரு கோயிலும் ஏதோ ஒரு வரலாறை தன்னிடம் வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமயிலாடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
தென்னிந்தியாவில் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டிருக்கக் கூடியவர் சிவபெருமான் உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தைக் கொண்டு இருந்தாலும் மன்னன் முதல் மக்கள் வரை அனைவருக்கும் குலதெய்வமாக அன்றிலிருந்து இன்று வரை சிவபெருமான் இருந்தவர்.
சமீபத்திய புகைப்படம்
அனைத்து மன்னர்களுக்குமான கடவுளாக சிவபெருமான் திகழ்ந்துள்ளார். உருவமில்லாமல் லிங்கு திருமேனியில் கோயில் கொண்டு சிவபெருமான் காட்சி கொடுத்த வருகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் இன்று வரை தமிழ்நாட்டின் கம்பீரமாக நின்று வருகிறது. ஒவ்வொரு கோயிலும் ஏதோ ஒரு வரலாறை தன்னிடம் வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமயிலாடி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்க கூடிய அம்மையார் பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. உற்சவமூர்த்தி ஆக முருக பெருமான் விளங்கி வருகின்றார். இந்தக் கோயிலில் சிவபெருமான் சுந்தரேஸ்வரர் என்ற திருநாமப் பெயரோடு அழைக்கப்படுகின்றார். முருகப்பெருமான் இந்த திருக்கோயிலில் தவக்கோளத்தில் பாலசுப்பிரமணியராக காட்சி கொடுத்தார்.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய மிருகப் பெருமானை தென்முகமாக நின்று வழிபாடு செய்தால் எதிரிகளால் ஏற்படக்கூடிய பகை பில்லி சூனியம் அனைத்தும் நிவர்த்தி அடையும் என நம்பப்படுகிறது. முருகப்பெருமான் வழிபாடு இந்த கோயிலில் மிகவும் விசேஷமாக கூறப்படுகிறது.
தல வரலாறு
சிவபெருமான் கயிலை மலையில் ஒரு முறை பார்வதி தேதியை சீண்டி பார்க்க நினைத்துள்ளார். நான் தான் இங்கு அழகில் சிறந்தவன் என பார்வதி தேவியிடம் சிவபெருமான் கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாமல் நான்தான் அழகில் சிறந்தவள் என பார்வதி தேவி சிவபெருமானிடம் கூறியுள்ளார்.
வாக்குவாதம் முற்றிப்போன காரணத்தினால் கோபத்தில் சிவபெருமான் மறைந்து விட்டார். சிவபெருமானை காணாத காரணத்தினால் பார்வதி தேவி தவித்து வந்துள்ளார். தான் செய்தது தவறுதான் என வருத்தப்பட்டு பார்வதி தேவி துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
சிவபெருமானை வரவழைப்பதற்காக அழகிய மயில் வடிவம் கொண்டு கண்ணு காஞ்சிபுரம் என்ற கோயிலுக்கு சென்று சிவபெருமானை துதித்துள்ளார் பார்வதி தேவி. அதன் பிறகு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் சுந்தர மகாலிங்கமாக லிங்க கோலத்தில் காட்சி கொடுத்துள்ளார்.
சிவபெருமானின் அழகிய வடிவம் கண்ட பார்வதி தேவி தோகையை விரித்து ஆனந்த நடனம் ஆடியுள்ளார். அதிலிருந்து இந்த தளம் திருமயிலாடி என அழைக்கப்பட்டுள்ளது. கண்ணுவ மகரிஷி இந்த தலத்தில் தான் யோக சாதனை செய்துள்ளார். அதனால் இந்த ஒரு கண்ணுவாச்சிபுரம் என அழைக்கப்பட்டுள்ளது.
பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னதி
ஒருமுறை கோயிலில் திருப்பணி செய்யும் பொழுது பிருகன் நாயகி சிலையில் விரல் பகுதி உடைந்து இருந்தது. அதன் காரணமாக வேறு ஒரு புதிய சிலையை பிரதிஷ்டை செய்து அந்த இடத்தில் வைத்துள்ளனர். ஒருநாள் திருப்பணியில் ஈடுபட்டிருந்தவர் உறங்கிக் கொண்டிருந்த பொழுது அவரது கனவில் வந்து உனது தாய்க்கு வயதாகி விட்டால் அவரை ஒதுக்கி வைத்து விடுவாயா? இல்லை அதற்கு பதில் வேறொரு தாயை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? ஏன் என்னை மாற்றி விட்டீர்கள். எனக்கும் ஒரு சன்னதி அமைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார் அதன் காரணமாகவே பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9