HT Yatra: தென் கைலாயம்.. குகைக்குள் அமர்ந்திருக்கும் சிவபெருமான்.. 6000 அடி உயரத்தில் வெள்ளிங்கிரி ஆண்டவர்
Apr 19, 2024, 06:30 AM IST
வரலாற்று சரித்திரமாக இருந்து வரும் கோயில்களில் ஒன்றுதான் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமான் கோயிலாக அமர்ந்திருந்து எத்தனையோ இடங்களை ஆட்சி செய்து வருகிறார். உலகெங்கிலும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசியை வழங்கி வருபவர் சிவபெருமான். இந்தியாவில் திரும்புமிடமெல்லாம் சிவபெருமானுக்கு கோயில் உண்டு. குறிப்பாக இந்தியாவின் தென்பகுதியில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.
சமீபத்திய புகைப்படம்
வரலாறு சிறப்புமிக்க எத்தனையோ சிவபெருமான் கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட வரலாற்று சரித்திரமாக இருந்து வரும் கோயில்களில் ஒன்றுதான் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருவார்கள்.
தல சிறப்பு
கிரி மலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள குகைக்கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அந்த குகை கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. செங்குத்தான மலைப்பாதை என்கின்ற காரணத்தினால் அதன் உயரத்தில் சீதோஷ்ண நிலை அதிகபட்ச குளிராக இருக்கும்.
கீழே இருக்கக்கூடிய வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 7:00 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்தப் பகுதி மற்றும் மலைக்கோயில் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தினால் விசேஷ நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
தல வரலாறு
கொங்கு நாட்டுப் பகுதியில் மேற்கு எல்லையில் சிவபெருமான் திருவுருவாக அமைந்த தென் கைலாயம் என அழைக்கப்படும் கோயில்தான் இந்த வெள்ளியங்கிரி கோயில். சிவபெருமானுக்கு எதிராக தட்சன் செய்த வேள்வியில் அனைவரும் கலந்து கொண்டனர். அதனால் சினம் கொண்ட சிவபெருமான் தேவர் மற்றும் முனிவர்களை அனைவரையும் சபித்தார். தனது முகங்களை 5 கிரிகள் ஆகக் கொண்டு கொங்கு நாட்டுப் பகுதியில் மறைந்தார்.
சாபத்தை பெற்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் சிவபெருமானை காண தேடி ஓடி வந்தனர். புரட்டாசி மாதத்தில் 5 வாரம் தவம் இயற்றி சனி பகவான் அருள் பெற்றதும் ஐப்பசி மாதம் 5 வாரம் பவானியில் துலாம் லுக்கு செய்தும் கார்த்திகை மாதம் ஐந்து வாரம் தவமிருந்தும் அனைவரும் தங்களது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றார்கள். அதற்குப் பிறகு ஐந்தாவது வாரத்தில் வெள்ளியங்கிரியில் சிவபெருமானை கண்டு வணங்கி அனைவரும் பெயரு பெற்றார்கள்.
தீராத நோயை தீர்க்கும் தீர்த்தம் இந்த திருக்கோயிலில் இருந்து வருகிறது அது ஆண்டி சுனை என அழைக்கப்படுகிறது. அர்ஜுனன் கடுமையான தவம் செய்து பாசுபதம் பெற்றது இந்த திருத்தலம் என கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அவர் முக்தி பெற்றார் என புராண வரலாற்றில் கூறப்படுகிறது.
பார்வதி தேவி வேண்டிக்கொண்டு கேட்டதால் சிவபெருமான் திரு நடனம் ஆடியது இந்த திருத்தலத்தில் தான். அது தற்போது பல்கலை மேடை என அழைக்கப்பட்டு வருகிறது.
தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோயில் ஏழு மலைகளைக் கொண்டது ஏழாவது மலையில் வெள்ளியங்கிரி பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9