தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Amalaki Ekadashi: பலன்களை அள்ளித் தரும் ஆமலகீ ஏகாதசி!

Amalaki Ekadashi: பலன்களை அள்ளித் தரும் ஆமலகீ ஏகாதசி!

Apr 01, 2023, 01:34 PM IST

google News
ஆமலகீ ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் அதீத பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
ஆமலகீ ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் அதீத பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆமலகீ ஏகாதசி தினத்தன்று மகாவிஷ்ணுவை வழிபாடு செய்தால் அதீத பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏகாதசி திருநாள் மிகவும் விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. மாதம்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி வருகிறது. பௌர்ணமி நோக்கி வரும் ஏகாதசி திதி நாள் வருகிறது. இது வளர்பிறை ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 23, 2024 06:00 AM

'நம்பிக்கையா இருக்க.. நல்லது நடக்கும்.. அர்ப்பணிப்பு முக்கியம்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 23, 2024 05:00 AM

பௌர்ணமியில் இருந்து அமாவாசை நோக்கி வருகின்ற ஏகாதசி திருநாள், தேய்பிறை ஏகாதசி என அழைக்கப்படுகிறது. வளர்பிறையில் வரும் ஏகாதசியானது சுக்லபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

தேய்பிறை ஏகாதசி திருநாளானது கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகிறது. மாதம் தோறும் ஏகாதசி பிறந்தநாள் வந்தாலும் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திருநாளானது வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது.

மாதந்தோறும் வரும் ஏகாதசி திருநாளன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட்டாலும், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி திருநாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த வைகுண்ட ஏகாதசி திருநாள் போல் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி திருநாளானது மிகவும் விசேஷமாகும். இம்மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி திருநாளானது ஆமலகீ ஏகாதசி எனப் போற்றப்படுகிறது. இன்றைய தினம் ஆமலகீ ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பான நாளில் விரதம் இருந்து நெல்லி மரத்தை வழிபட்டால் துக்கங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகமாகும். இந்த தினத்தில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருப்பார்கள். நெல்லி மரத்திற்கு அடியில் ஸ்ரீ பரசுராமரின் உருவப்படத்தை வைத்து பிரார்த்தனை செய்பவர்களும் உண்டு.

நெல்லி மரத்தை மூன்று முறை சுற்றி வந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒருவேளை நெல்லி மரம் இல்லாத வீட்டில் பூஜை அறையில் வணங்கி வழிபாடு செய்து புளியோதரை மற்றும் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

நெல்லி மரத்திற்குப் பதிலாகத் துளசிச் செடியை மூன்று முறை சுற்றி வந்து வேண்டிக் கொள்ளலாம். இதன்மூலம் கோ தானம் செய்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் பங்குனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதேசி திருநாளன்று மகாவிஷ்ணு வேண்டி விரதம் இருந்து வழிபட்டு பிரார்த்தனை செய்தால் வாழ்வில் வளம் பெருகும் என்பது ஐதிகமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக ஏகாதசி திருநாள் அன்று விரதம் இருந்து வழிபட்டால் நேரடி மோட்சம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் நேரடியாக மகாவிஷ்ணு பாதத்தை அடையலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி