தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  நம் தினசரி வாழ்க்கையில் திதி நாட்களில் அப்படி என்ன விசேஷம் இருக்கு.. இவ்வளவு முக்கியத்துவம் தராங்களே.. பார்க்கலாம் வாங்க

நம் தினசரி வாழ்க்கையில் திதி நாட்களில் அப்படி என்ன விசேஷம் இருக்கு.. இவ்வளவு முக்கியத்துவம் தராங்களே.. பார்க்கலாம் வாங்க

Oct 16, 2024, 11:25 AM IST

google News
இந்து மத பஞ்சாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திதி என்பதை சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் என்று பொருள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து நேர் கோட்டில் இருக்கும். அதன் பின்னர் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகும்.
இந்து மத பஞ்சாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திதி என்பதை சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் என்று பொருள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து நேர் கோட்டில் இருக்கும். அதன் பின்னர் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகும்.

இந்து மத பஞ்சாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திதி என்பதை சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் என்று பொருள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து நேர் கோட்டில் இருக்கும். அதன் பின்னர் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகும்.

இந்து மத சாஸ்திரத்தில் திதி என்று அழைக்கப்படும் வட மொழிச் சொல்லுக்கு தூரம் என்று பொருள். இந்து மத பஞ்சாங்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திதி என்பதை சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் என்று பொருள் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாசை நாளில் சூரியனும் சந்திரனும் சேர்ந்து நேர் கோட்டில் இருக்கும். அதன் பின்னர் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகும். அதேபோல் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திதி நாட்களுக்கு தனித்துவமான சிறப்பு உண்டு.

சமீபத்திய புகைப்படம்

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 23, 2024 06:00 AM

'நம்பிக்கையா இருக்க.. நல்லது நடக்கும்.. அர்ப்பணிப்பு முக்கியம்' மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 23, 2024 05:00 AM

1.பிரதமை திதி:

அதிபதி: அக்னி பகவான்

இந்த திதி நாளில் பொதுவாக உலோகம், மரம் போன்றவற்றை பயன்படுத்தி சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல், ஆயுதம் கத்தி போன்ற வேலைகளை செய்வது நல்லது.

2. துவிதியை திதி:

அதிபதி: துவஷ்டா தேவதை

இந்த திதி நாளில் பொதுவாக செய்யத் தக்க காரியம் என்று பார்த்தால் விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், போன்ற நற்காரியங்களை செய்யலாம். மேலும் வீடு கட்டுவதற்கு மிகவும் உகந்த திதி.

3. திருதியை திதி:

அதிபதி: பார்வதி

திருதியை திதியில் வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் போன்ற காரியங்களை செய்ய மிகவும் உகந்ததிதி ஆகும்.

4. சதுர்த்தி திதி:

அதிபதி: விநாயகர்

சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:

எதிரிகளை வீழ்த்துதல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யலாம்.

5. பஞ்சமி திதி:

அதிபதி: சர்ப்பம்

பஞ்சமி திதியில் செய்யும் காரியம் பொதுவாக நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம். விஷ முறித்தல் மருந்து செய்தல், அறுவை சிகிச்சைகளுக்கு உகந்தது.

6.சஷ்டி திதி:

அதிபதி: முருகன்

சஷ்டி திதியில் வேலைக்கு சேரலாம். பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க மிகவும் உகந்த திதி இது. இதில் நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!

7. சப்தமி திதி:

அதிபதி: சூரியன்

சப்தமிதிதியில் வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்றம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது சப்தமி திதி.

8.அஷ்டமி திதி:

அதிபதி: சிவபெருமான்

அஷ்டமி திதியில் யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைகள் செய்ய மிகவும் உகந்த திதி இது.

9.நவமி திதி:

அதிபதி: பாராசக்தி

நவமி திதியில் பகையை அழிக்க முயற்சி எடுக்கலாம். இது வெற்றி தரும்.

10. தசமி திதி:

அதிபதி: ஆதிசேஷன்

தசமி திதியில் தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகு கேது பரிகாரம் செய்யவும் உகந்தது.ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி தசமி

11.ஏகாதசி திதி:

அதிபதி: தர்ம தேவதை

ஏகாதசி திதியில் பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, மற்றும் சாந்தி செய்ய மிகவும் உகந்த திதி

12. துவாதசி திதி:

அதிபதி: விஷ்ணு

துவாதசி திதியில் தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். (திருவோணம் இணையும் துவாதசியை மட்டும் தவிர்ப்பது நல்லது)

13.திரயோதசி திதி:

அதிபதி: மன்மதன்

திரயோதசி திதியில் அனைத்தும் செளபாக்கியமான காரியங்களையும் செய்யலாம். நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி போன்ற முயற்சிகளுக்கு நல்ல நாள். நீண்ட கால திருமண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும் என்பது நம்பிக்கை. திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!

14.சதுர்தசி திதி:

அதிபதி: கலிபுருஷன்

சதுர்தசி திதியில் பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை செல்ல உகந்த திதி.

அமாவாசை மற்றும் பவுர்ணமி

வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்க வேண்டும்.

தேய்பிறையில் சிவபெருமானை வணங்க வேண்டும்.

வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்ப்பது நல்லது

அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!

பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும் மருந்துண்ணல் , திருமண நிச்சயம், போன்றதை செய்யலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி