Weekly Horoscope: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி ராசிகளுக்கு இந்த வாரம் சோதனையா? சாதனையா? வார ராசிபலன்கள்!
Oct 13, 2024, 04:49 PM IST
Weekly Horoscope: மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான வாரராசிபலன்கள் இதோ!
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் திட்டங்கள் வெற்றி பெறும். சகோதரர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடின உழைப்பு அதிகமாக இருக்கும் வாரம் இது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு ஆடை போன்ற பரிசுகள் கிடைக்கும். வேலை மாற்றத்தால், நீங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். தாயார் ஆதரவாக இருப்பார்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் மனதில் மகிழ்ச்சியான உணர்வுகள் இருக்கும். ஆனாலும் தன்னடக்கத்துடன் இருங்கள். அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும், தாயுடன் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கலாம். சிலருக்கு உத்தியோகத்தில் வேறு இடத்திற்கு இடமாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். ஆடைகளுக்கான செலவுகள் அதிகரிக்கலாம். தாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு பொறுமை குறையும். சுயக்கட்டுப்பாடு உடன் இருக்க வேண்டிய வாரம். உங்கள் பேச்சுக்கு பலரும் கட்டுப்படுவர். சில நேரம் ஏதோ ஒன்றை நினைத்து அசௌகரியத்தை உணர்வீர்கள். இனிப்புகள் மீதான ப்ரியம் அதிகரிக்கும். சொத்து மூலம் வருமானம் கூடும். தொழில் வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை உடன் செயல்பட்டு வெற்றி அடைய வேண்டிய வாரம் இது. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்கள் மிக கவனமாக படிப்பீர்கள். சொத்துக்களை பராமரிப்பதற்கான செலவுகள் கூடும். வாழ்க்கை துணை உடல்நலனில் கவனம் தேவை. உங்களின் கடின உழைப்பை சகோதரர்கள் வியப்பார்கள். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னடக்கம் மற்றும் தன்னம்பிக்கை உடன் செயல்பட வேண்டிய நாள். சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும் என்பதால் வாரம் முழுவதும் முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்பத்தில் சுகபோகங்களும் வசதிகளும் விரிவடையும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பணியிட மாற்றம் சாத்தியமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பு வெளிப்படும். தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் உற்சாகம் நிறைந்து இருக்கும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. சில நேரங்களில் மனதில் குழப்பம் அதிகரிக்கலாம். ஆன்மீக வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். தாயிடம் இருந்து பணம் கிடைக்கும். எழுத்து, பேச்சு, சாப்ஃட்வேர் உள்ளிட்ட அறிவுசார் துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் கூடும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.