Sani Bhagavan : சனிபகவானின் பார்வை.. மீன ராசிக்காரர்களுக்கு பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது!
Aug 06, 2023, 07:06 PM IST
குருபகவான் மற்றும் ராகு பகவான் இணைந்து மேஷ ராசியில் பயணம் செய்வதால் பலன் பெறப்போகும் மீன ராசி குறித்து பார்க்கலாம்.
செவ்வாயின் வீடாக விளங்கக்கூடிய மேஷ ராசியில் ராகு பகவானும் குரு பகவானும் இணைந்திருக்கின்றனர். கும்ப ராசியில் இருந்து சனி பகவான் பார்வை எடுக்கிறார். ராசியில் முதலாவது ராசியாக விளங்கக்கூடியது மேஷ ராசி. இந்த ராசிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ராகு மற்றும் குரு இணைந்து பயணம் செய்ய சனியின் பார்வை கிடைக்கின்றது.
சமீபத்திய புகைப்படம்
இந்த பயணமானது அக்டோபர் மாதம் வரை நீடிக்கும். சனிபகவான் மற்றும் குரு பகவானுக்கு மட்டுமே ராஜ கிரகங்களுக்கான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ராகு, குரு மற்றும் சனி மூவரும் சேர்ந்து அதிர்ஷ்ட பலனை கொடுக்கப் போகின்றனர்.
குரு மற்றும் ராகு சேர்ந்திருக்கும் பொழுது சனி பகவானின் பார்வை பட்டால் அது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அப்படி உருவாகும் யோகம் தான் சண்டால யோகம் என அழைக்கப்படுகிறது. ராகு பகவான் மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். குருவுடன் இணைந்துள்ளார்.
மீன ராசி
குருபகவான் ராகுவோடு இணைந்து குடும்ப இன்பத்தை உங்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். சனிபகவானின் பார்வையானது உங்களுக்கு நன்மையை தரப்போகின்றது.
தனஸ்தானம் உங்களுக்கு வலுவாக இருக்கின்ற காரணத்தினால் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. எண்ணிலடங்கா பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். மனம் அமைதி பெறும்.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்