Murugan Thirukalyanam: பழனி முருகனுக்கு திருக்கல்யாணம்!
Oct 30, 2022, 10:46 PM IST
பழனி மலை முருகன் கோயிலில் நாளை திருக்கல்யாண நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற உள்ளது.
தமிழ் கடவுள் எனக் கூறப்படும் முருகப்பெருமான் அனைவராலும் வழங்கப்படக்கூடிய தெய்வங்களில் ஒருவர். ஆறுபடை வீடுகள் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி தரும் முருகப்பெருமானுக்குப் பழனி மலையில் நாளை திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு சிறப்பாகப் பழனியில் கொண்டாடப்படுகிறது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கப்பட்ட சஷ்டி திருவிழா, சூரசம்கார நிகழ்ச்சியுடன் நிறைவு பெறும்.
இதன் முக்கிய நிகழ்வாக நாளை அக்டோபர் 31ஆம் தேதி அன்று திருக்கல்யாணம் வெகு விமர்சையாக காலை 9.30 மணிக்குத் தொடங்கி 10.30 மணிக்குள் பழனி மலைக் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
அந்தக் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அதே சமயம் நாளை மாலை 7 மணி முதல் 8 மணிக்குள் பெரிய நாயகி அம்மன் கோயிலில் உள்ள முகத்துக்குமாரசாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.