மீனத்தில் ராகு உடன் இணையும் சனி பகவான்! மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன நடக்கும்? சனி பெயர்ச்சி பலன்கள்!
Sep 28, 2024, 09:36 PM IST
sani peyarchi 2025: கணக்கை தீர்ப்பதற்கான கிரகமாக சனி பகவான் உள்ளார். 12ஆம் வீடான மீனம் ராசிக்கு சனி பகவான் செல்வதான் மூலம் 12 வீடுகளையும் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக சுற்றி முடிக்க உள்ளார். அதன் பின்னர் மேஷம் ராசியில் அவர் நுழையும் போது நீசம் பெற்று விடுவார்.
சனி பகவான் ஆனவர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏற்கெனவே மீனம் ராசியில் இருக்கும் ராகு பகவான் உடன் சனியின் சேர்க்கை ஏற்படும் போது மிகப்பெரிய தாக்கம் உண்டாகும்.
சமீபத்திய புகைப்படம்
கணக்கை தீர்ப்பதற்கான கிரகமாக சனி பகவான் உள்ளார். 12ஆம் வீடான மீனம் ராசிக்கு சனி பகவான் செல்வதான் மூலம் 12 வீடுகளையும் 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக சுற்றி முடிக்க உள்ளார். அதன் பின்னர் மேஷம் ராசியில் அவர் நுழையும் போது நீசம் பெற்று விடுவார். சனி பகவான் மீனம் ராசியில் பிரவேசம் செய்யும் காலத்தில் எதிர்திசையில் வரும் ராகுவை கடக்க வேண்டும். ராகு சனியின் வீட்டுக்கும், சனி பகவான் குருவின் வீட்டுக்கும் செல்வார்கள்.
குரு பகவானின் வீட்டிற்கு செல்லும் சனி பகவான் அமைதியான நிலையில் செயல்படுவார். மார்ச் மாதம் 16 முதல் மே மாதம் 23 ஆம் தேதி வரை சனி மற்றும் ராகு பகவானின் சேர்க்கை இருக்கும். இருவரும் 3 டிகிரிக்குள் இணையும் போது ராகு பகவான் சனி பகவானாகவே செயல்படுவார்.
பேராசையை கொடுக்கும் கிரகமாக ராகு உள்ளார். எது கொடுத்தாலும் போதாது என்ற நிலையை ராகு பகவான் உருவாக்குவார். ருணம், ரோகம், சத்ரு, மந்தம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் கிரகமாக சனி பகவான் உள்ளார்.
மேஷம்
மேஷ ராசியை பொறுத்தவரை சனி பகவான் ராசிக்கு 12ஆம் இடத்திற்கு வருவதால் ஏழரை சனி நிலைக்கு செல்கிறீர்கள். இந்த காலத்தில் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் முதலீடு, உடல்நிலை, கால் சம்பந்தப்பட்ட விஷயங்கள், கடன்களில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
ராகு பகவான் 11 ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார்.
விரைய சனி காலம் தடை மற்றும் தாமதத்தை ஏற்படுத்தும், வயிறு, கால் பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய நபர்கள் உடனான தொடர்பில் கவனம் தேவை, அவர்களுக்கு கடன், ஜாமீன் தருவதை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசியை பொறுத்தவரை 11 ஆமான லாப ஸ்தானத்தில் சனி பகவான் வரப்போகிறார். இந்தனால் நிகரற்ற லாபம் கிடைக்கும். 30 வருடத்துக்கு ஒரு முறை தான் இந்த வாய்ப்பு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். பணவரவு பெரும் அளவில் இருக்கும். ரிஷபம் ராசிக்கு முதல் தர ராஜயோகத்தை தரும் அதிபதிகளில் சனி பகவான் முக்கியமானவர் ஆவார்.
மீன ராசி, ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது முயற்சிகள், தனம், குடும்பம் பூர்வீக வழியில் நன்மைகள் உண்டாகும். அடுத்து வரும் இரண்டரை ஆண்டுகளை முறையாக பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு ராசிக்கு பத்தாம் இடத்திற்கு சனி பகவன் வர உள்ளார். பத்தில் ஒரு பாவ கிரகம் நின்றால் பதவிகள் பல தேடி வரும் என்ற சொலவடை உண்டு.
குருவின் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய போகிறார். இதனால் வாழ்கை துணை மூலம் ஏற்றம் உண்டாகும். வாழ்கை துணை வழியில் முன்னேற்றம், வெற்றி உண்டாகும். தந்தை வழியில் முன்னேற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் நன்மைகள் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.