Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 17, 2024, 03:23 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 18ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 18ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வழக்கு தொடர்பாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு உண்டு. படிக்கும் மாணவர்கள் புதிய சாதனைகளை படைப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பண வரவு அதிகரிக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் விடுமுறைக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் அதிக கவனம் உடன் செயல்படுவது முக்கியம். அலுவலக அரசியலைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வாக்குவாதங்களில் இருந்து விலகி இருங்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் பணிச்சுமை நிறைந்து இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பூர்வீக வீட்டை சீர் செய்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்கு செல்லலாம். ஆனால் உங்கள் வாழ்கை துணையின் பிடிவாத குணத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தொழில் தடைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்த தடைகள் விலகும். அன்புக்கு உரிய நபர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிக லாபம் கிடைக்கும். உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆலோசனைகளை மதிக்கவும். பெரிய அளவில் யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். அதை திரும்பப் பெறுவதில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆனால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமைகள் அதிகம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை புத்திசாலித்தனமாக தீர்க்கவும். இன்று செல்வம் பெருக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆன்மீகப் பணியில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தொழிலை விரிவுபடுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் உண்டாகும். பிரியமானவர்களை சந்திக்க பயணம் மேற்கொள்வீர்கள். சிலர் வீட்டைப் பழுது பார்க்க திட்டமிடலாம். உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். உறவுகளில் சுயநலமாக இருப்பதை தவிர்க்கவும். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பணம் சேமிப்பதில் கவனம் உடன் செயல்பட வேண்டிய நாள். செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அவசியம். தொழில் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். குடும்பத்துடன் விடுமுறையில் வெளியில் செல்ல திட்டமிடலாம். பழைய சொத்துக்களை விற்றோ அல்லது வாடகைக்கு விட்டோ லாபம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்களிடன் அன்பாகவும், ஆதரவாகவும் இருப்பார்கள். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பேச்சில் இனிமை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்