Rasipalan : மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே நாளை அக்.12 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Oct 11, 2024, 02:50 PM IST
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 12ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Rasipalan: வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் மதிப்பிடப்படுகிறது. அனைத்து 12 ராசிகளுக்கும் அக்டோபர் 12ஆம் தேதி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த நாளில் பொறுமை குறையும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்படும். அழகு சாதன பொருட்களுக்காக செலவுகளை செய்வீர்கள். உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் கலவையான உணர்வுகள் மனதில் இருக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படிப்பீர்கள். ஜவுளி பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இந்த நாளில் செலவுகள் அதிகமாக இருக்கும். பிள்ளைகளின் உடல்நலனின் கவனம் தேவை. பலருக்கு செலவுகளும் அதிகரிக்கலாம். சிலர் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தோரின் உதவியால் வியாபாரம் பெருகும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு கோபம் வந்து போகும் என்பதால் பேச்சில் மிக கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வர்த்தகத்தில் விற்பனை பெருகும். பணியிடத்தில் கடின உழைப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தை உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். திருமண வாழ்கையில் மகிழ்ச்சி இருக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கலாம். சிலரால் எரிச்சல் அடைய வாய்ப்பு உண்டு. ஆன்மீக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் தேவையற்ற கோபத்தையும் விவாதத்தையும் தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி செய்யுங்கள். பிரிந்த நண்பர்கள் உடன் மீண்டும் பேசுவீர்கள். தாயாருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படலாம். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள். மன அமைதி கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றிகளை குவிப்பீர்கள். வாகனம் இயக்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்கள் தன்னடக்கத்துடன் செயல்படுவதன் மூலம் நன்மைகளை அடைய முடியும். நிதானமாகவும், பொறுமையாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். சில நேரங்களில் அதீத கோபம் வெளிப்படும். தினசரி செலவுகளால் அதிம சிரமங்களை அனுபவிப்பீர்கள். நண்பரின் உதவியுடன், புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். உடையாடலில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தேவையற்ற கோபம் மற்றும் விவாதங்களை தவிர்க்கவும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். உங்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருங்கள். சில விஷயங்களில் குழப்பமாக செயல்படுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.