HT Yatra: ஆலகால விஷம் அருந்திய சிவபெருமான்.. அருள் கொடுக்க அமர்ந்த ஆலங்குடி.. பெயரிட்ட சுந்தர பாண்டியன்
Jun 29, 2024, 06:10 AM IST
Arulmigu Namapureeswarar Temple:
Arulmigu Namapureeswarar Temple: மிகப்பெரிய தன்வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். ஆதிகாலம் தொட்டு இன்று வரை அசைக்க முடியாத இறைவனாக சிவபெருமான் விளங்கி வருகின்றார் ஒவ்வொரு நாளும் இவருக்கென பக்தர்கள் கூட்டம் அதிகமாக்கிக் கொண்டே வருகின்றன. தனக்கென உருவம் இல்லாமல் லிங்க திருமேனியில் அனைத்து கோயில்களிலும் சிவபெருமான் காட்சி கொடுத்திருக்கிறார்.
சமீபத்திய புகைப்படம்
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை அனைத்து மக்களுக்குமான கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார் நாடுகளுக்காக மன்னர்கள் போரிட்ட காலத்திலும் அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். தோழர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார் அதற்கு சாட்சியாக மிகப்பெரிய ராஜனாக விளங்கிய ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் மிகப்பெரிய சான்றாக இன்று வரை இருந்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகிய கலைநட்பத்தோடு இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது. இதுபோன்று எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்களை அடுத்தடுத்து ஆட்சி செய்த மன்னர்கள் கட்டி வைத்து வழிபாடுகளை செய்து வந்துள்ளனர். ஒவ்வொரு கோயிலும் ஏதோ ஒரு வரலாறை தன் வசம் வைத்து வாழ்ந்து வருகின்றன. இறைவனுக்கு கோயில் எழுப்புவது மட்டுமல்லாது தங்களது கலை நுட்பத்தையும் வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு விதமான சிற்பங்களை இந்த கோயிலில் மன்னர்கள் சான்றாக வைத்து விட்டு சென்றுள்ளனர்.
நாட்டின் மீது எந்த அளவிற்கு பற்று வைத்திருக்கின்றனவோ, அந்த அளவிற்கு கோயில் கட்டுவதில் மிகப்பெரிய ஈடுபாடுகளை மன்னர்கள் கொடுத்து வந்துள்ளனர். இதுபோன்ற கோயில்களின் வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோவில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் சிறப்பு என்னவென்றால் மூலவர் சன்னதிக்கு எதிரே அமர்ந்திருக்க கூடிய நந்தி பெருமான் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது அதிசயமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது. மார்கழி 25ஆம் தேதி அன்று அதாவது கிறிஸ்மஸ் தினத்தன்று சூரிய பகவான் பதினைந்து நிமிடம் தனது ஒலிக்கதிர்களால் இறைவனை வழிபடுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த நிகழ்வு தை மாதம் பத்தாம் தேதி வரை நிகழ்கின்றது.
தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த திருக்கோயிலில் வந்து சிவபெருமானை வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றன.
தல வரலாறு
அமுதம் பெறுவதற்காக தேவர்கள் மற்றும் அசுரர்கள் இருவரும் சேர்ந்து மந்திர மலையை மத்தாக வைத்து வாசுகி பாம்பை கயிறாக திரித்து பாற்கடலை கடைந்தனர். அப்போது வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை வெளியே காட்டியது. இதனைக் கண்டு அச்சம் கொண்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். அனைவரையும் அழிக்கக்கூடிய திறன் கொண்ட அந்த நெஞ்சை சிவபெருமான் விஷத்தை குடித்தார்.
அவ்வாறு ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான் அமர்ந்த இடம் தான் இந்த ஆலங்குடி தலம். ஆலம் என்றால் விஷம். குடி என்றால் குடிப்பது மற்றும் ஊர் என்று அர்த்தம். அதன் காரணமாகவே இந்த ஊருக்கு ஆலங்குடி என பெயர் வந்துள்ளது.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சுந்தர பாண்டியன் மன்னன் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி உள்ளார். இந்த சிவபெருமானை வந்து வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும், வாழ்க்கைக்கு பிறகு மோட்சம் கிடைக்கும் எனக் கூறி அந்த மன்னன் நாமபுரீஸ்வரர் என பெயரிட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9