Maha Shivratri 2024: இந்த நேரத்தில் சிவனை வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்குமாம்!
Mar 08, 2024, 02:15 PM IST
இவ்விழா ஐந்து வகைகளில் பிரிக்கப்படுகிறது. நித்திய சிவராத்ரி, பட்ச சிவராத்ரி, மாத சிவராத்ரி, யோக சிவ ராத்ரி, மஹா சிவராத்ரி என பிரிக்கப்படுகிறது.
சிவபெருமானை வழிபடும் சிறப்பு மிக்க தினங்களில் ஒன்று, மஹா சிவராத்திரி. அன்றைய தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள், அபிஷேகம் நடைபெறும். இன்றிரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான நேரம், “லிங்கோத்பவர் காலம்” எனப்படும்.
சமீபத்திய புகைப்படம்
இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்தாலும், பார்த்தாலும்,வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்தாலும், அதைப் பார்த்து மகிழ்ந்தாலும், "சிவாய நமஹ" என்று சிந்தித்திருந்தாலும், சிவ பஞ்சாட்சரம், தோத்ரங்கள் பாடினாலும், பாவங்கள் விலகி, புண்ணியங்கள் வந்து சேரும் என்பர்.
சிவராத்திரி வந்தது பற்றி, பல புராணக் கதைகள் உள்ளன. திருமாலுக்கும், பிரம்மனுக்கும் நடந்தபோட்டியன்று, ஈசன், நெருப்பு வடிவமாக ஓங்கி உயர்ந்து, இறுதியில், சிவ லிங்க மேனியாகக் காட்சி தந்த நாளே சிவராத்திரி எனவும்,பாற்கடலைக் கடைந்த போது, ஈசன் ஆலஹால விஷமருந்த, தேவி தடுத்து,அவர்" திருநீலகண்டன் என்றாக , தம்மைக் காத்தருளிய, ஈசனை, தேவர்கள், இரவு முழுவதும் பூஜித்து வழிபட்டதே, சிவராத்திரி எனவும் நம்பப்படுகிறது. ஒருமுறை,தேவி பார்வதி, ஈசன் கண்களை மூடினார். இதனால் உலகம் இருளில் மூழ்கியது. இதை கண்ட பார்வதி ,ஓர் இரவு, நான்கு காலங்களிலும், ஈசனை வழிபட, உலகம், ஒளிபெற்றது. இந்நாளே சிவராத்திரி என்பர் பலர்.
காட்டில், புலிக்கு பயந்து, வில்வ மரத்தில் ஏறியவன், தான் உறங்காதிருக்க, மர இலைகளை இரவு முழுதும் பறித்து கீழே போட, அங்கு மண்ணில் புதைந்திருந்த பழைய லிங்கம் அதை ஏற்க,பாவங்கள் நீங்கி, சொர்க்கம் கிடைத்தது எனும் கதை ஒன்றும் நீண்ட கால பழக்கத்தில் உள்ளது.
இவ்விழா ஐந்து வகைகளில் பிரிக்கப்படுகிறது. நித்திய சிவராத்ரி, பட்ச சிவராத்ரி, மாத சிவராத்ரி, யோக சிவ ராத்ரி, மஹா சிவராத்ரி என பிரிக்கப்படுகிறது. இதில், மாசி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வருவது மஹாசிவராத்ரி.
லிங்கோத்பவ காலத்தில், சிவலிங்கத்தில், மும்மூர்த்திகளும் அருள்பாலிப்பர். மஹாசிவராத்திரி விரதத்தை, 12,/24 வருட காலங்கள் தொடர்ந்து செய்ய, தாம் வீடு பேறு அடைவது தவிர, தமது 21 தலைமுறையினர் பலன் பெறுவர் என்பது ஐதீகம்.
"Shiv means that ,which is
auspicious, propitious,
gracious, benign, kind,
benevolent and friendly.
On shivrathri night, shiv
bestows his grace through
the cosmic dance of fusion,
shiv with Shakthi, leading to
evolution and transformation"
என பல்வேறு நாட்டினரும் புகழ்வர். ஈசன் திருநடனம், பிரபஞ்ச சுழற்சியை, சமநிலைப்படுத்தி, வாழ்வு, சாவு இரண்டையும் மீட்டு எடுக்கிறது என்பர். இந்த விழா சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றது.
காத்மண்டு பசுபதிநாத் ஆலயமே, சிறப்பான அலங்காரங்களிலுள்ள இன்று, நேபாளத்தின் தேசிய விடுமுறை தினம். பாகிஸ்தான், கராச்சியில், ஸ்ரீ ரத்னேஷ்வர் மகாதேவ் ஆலயமும் ஜொலிக்கும்.
ஆன்மீகப் பெரியவர்கள், மகாசிவராத்திரி என்பது, கிரஹத்தின், வடக்கு அரைக்கோளம், ஒரு தனித் துவமான இடத்தில் நிலை நிறுத்தப்படும் நாளாகும். இது அனைத்து உயிர்கள் ஏராளமான, ஆற்றல் மூலத்தைக் பெற வழி வகுக்கும் என்பார்கள்.
ஜோதிட ரீதியாக, ஐந்து யோகங்களான, சர்வார்த்தி சித்தி யோகம், சிவயோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளி பிரதோஷம் வரும் சிறப்பான நாளிது. தயிர், பால், தேன், நெய், சர்க்கரை கலந்த பஞ்சாமிர்தத்தை ஆலயங்களில் தருவர். வில்வ இலையால் அர்ச்சனை செய்வர்.
கோள்களின் அமைப்பு, சக்தி ஓட்டம் மேல் நோக்கி எழும்பும் விதத்தில் இயற்கையாகவே அமைந்த இந்த நாள், சிவ-பார்வதி திருமண நன்நாள் எனவும் அறியப்படுகிறது.விழாவினுடைய தோற்றம் ,சிறப்பு பற்றி, ஸ்கந்த,லிங்க, பத்ம புராணங்களில் உள்ளது.
"சிவம்" என்றால் மங்களம் என்கிற பொருளுமுண்டு. இன்று புலன்களை அடக்கி, விரதமிருந்து வழிபட, பிரம்மஹத்தி தோஷம் விலகும், காசியில் வீடுபேறு அடைந்த பலன் கிடைக்கும். சர்வ மங்களமும் கிட்டும். தங்கள் ராசியின் படி லிங்க ருத்ராபிஷேகம் செய்வர். இன்று தமிழ்நாடு உள்பட பல சிவ ஸ்தலங்களிலும், கோனார்க்,பட்டடகல், மோதேரா போன்ற இந்து ஆலயங்களிலும்,கோவை ஈஷா மையத்திலும், பாடல், நடன விழாக்களும் நடக்கும். உலக வாழ்வின் இருள், மற்றும் அறியாமைகளைப் போக்கும் இந்நாளில் நாமும் ஈசனை மனமுருக வழிபட்டு வளம் பெறுவோம்.
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்