Magaram Rasi: மகரம் ராசியை கோடிகளில் குளிக்க வைக்கும் தர்ம கர்மாதிபதி யோகம்! அடித்து ஆடும் புதன், சுக்கிரன்! அடேங்கப்பா!
Jul 13, 2024, 01:17 PM IST
Dharmakarmatipati Yogam: மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளும் ஜோதிடத்தில் சர லக்னம் என்ற பெயரில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக சர லக்னங்களுக்கு அமையக் கூடிய யோகங்கள் வலிமை ஆனதாக இருக்கும். அதனால்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகளை வாழ்வில் பெறும்.
சனி பகவானின் வீடான மகரம் லக்னத்திற்கு 9 மற்றும் 10ஆம் இடமாக கன்னி மற்றும் துலாம் ஆகியவை வருகின்றது. கன்னி ராசிக்கு அதிபதியாக புதன் பகவானும், துலாம் ராசிக்கு அதிபதியாக சுக்கிர பகவானும் உள்ளனர். இவர்கள் இருவரும் மகரம் ராசி அதிபதியான சனி பகவானுக்கு மிக நெருங்கிய நண்பர்கள் ஆவார். எனவே தர்ம கர்மாதிபதி யோகம் சிறப்பாக அமையப்பெரும் விதிகளை கொண்ட லக்னங்களில் மகரம் லக்னமும் ஒன்றாக விளங்குகின்றது.
சமீபத்திய புகைப்படம்
சர ராசிகள்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய 4 ராசிகளும் ஜோதிடத்தில் சர லக்னம் என்ற பெயரில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக சர லக்னங்களுக்கு அமையக் கூடிய யோகங்கள் வலிமை ஆனதாக இருக்கும். அதனால்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகளை வாழ்வில் பெறும்.
மேஷம் லக்னத்தை பொறுத்தவரை தர்மகர்மாதிபதி யோகம் சனி மற்றும் குரு பகவான் மூலம் உண்டாகும். இவர்கள் சம கிரகங்கள் என்பதால் தர்மகர்மாதிபதி யோகம் அந்த அளவுக்கு பலனை தருவதில்லை.
கடகம் லக்னத்திற்கான தர்மகர்மாதிபதி யோகம் மிக சிறப்பு பெற்றதாக இருக்கும். குரு, செவ்வாய் மூலம் இந்த யோகம் மிக சிறந்த நன்மைகளை செய்யும்.
துலாம் லக்னத்தை பொறுத்தவரை புதன், சந்திரன் மூலம் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகின்றது, புதன் - சந்திரனுக்கு ஆகாது என்பதால் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலன்களை தராது.
ஆனால் மகரம் லக்னத்திற்கு அதிநட்பு கிரகங்களான சுக்கிரன், புதன் மூலம் மிகப்பெரிய நன்மைகளை தர்மகர்மாதிபதி யோகம் மூலம் பெற இயலும்.
ராஜயோகம் தரும் கிரக சேர்க்கைகள்
மேலும் துலாம் ராசியில் உச்சம் பெறும் கிரகமாக சனி உள்ளதால், புதன், சுக்கிரன் இணைவு ராஜ யோகத்தை ஏற்படுத்தும்.
மகரம் லக்னத்திற்கு 6, 9ஆம் இடங்களுக்கு உரியவராக புதன் பகவான் உள்ளார். கடன், நோய், எதிரி, கடும் உழைப்பை வெளிப்படுத்தும் தன்மையை புதன் கொடுக்கின்றார். இதில் இன்றைய காலத்தில் கடன் கிடைப்பது கூட நல்ல விஷயமாக பார்க்கப்படுகின்றது. கடனை புத்திசாலிதனமாக பயன்படுத்துபவர்கள் வாழ்கையில் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்.
கடன் அமைப்பை ஏற்படுத்தி, ஒரு மகரம் லக்னக்காரரை உயர்த்தும் நிலை தர்மகர்மாதிபதி யோகம் மூலம் உண்டாகும்.
கன்னி ராசியில் புதன், சுக்கிரன் இணையும் போது சுக்கிரன் நீசபங்க ராஜ யோகத்தை அடைவார். இதனால் அற்புதமான தூரதேச பயணம், குறைவான வட்டியில் கடன் கிடைப்பது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும்.
துலாம் ராசியில் புதன், சுக்கிரன் இணைந்தால், சுக்கிரன் பலம் பெறுவார், புதன் அதிநட்பு பெற்றுவார். இதனால் கலைத்துறை, அறிவுத்துறைகளில் முன்னேற்றம் மகரம் லக்னத்திற்கு உண்டாகும். மகரம் லக்னத்தை பொறுத்தவரை புதனும், சுக்கிரனும் எந்த வீட்டில் இருந்தாலும் மிகப்பெரிய நன்மைகளை அடைய இயலும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.