அதிர்ஷ்ட கைகளை தட்டும் சுக்கிரன்.. நட்சத்திரத்தில் நடனமாடும் 3 ராசிகள்.. கைகூப்பி வணக்கம் சொல்லுங்க!
Dec 21, 2024, 01:09 PM IST
Lord Venus: சுக்கிரனின் திருவோண நட்சத்திர பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்ட அவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சமீபத்திய புகைப்படம்
அந்த வகையில் சுக்கிரன் திருவோண நட்சத்திரத்தில் தனது பிரவேசத்தை தொடங்கியுள்ளார். சுக்கிரனின் திருவோண நட்சத்திர பயணமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய வேலைக்கான திட்டங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமையும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.
கன்னி ராசி
சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல காலத்தை கொடுக்கப் போகின்றது. துன்பங்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் மற்றும் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். சங்கடங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
மகர ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லப் போகின்றது. நிதி பாதுகாப்பை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் வாழ்க்கை தரம் அதிகரிக்கப் போகின்றது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சிறப்பான யோகம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவு கையை காட்டும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.