HT Yatra: வள்ளியை திருமணம் செய்த தலம்.. பத்தடி உயரத்தில் பிரம்மாண்ட முருகன்
Mar 04, 2024, 06:00 AM IST
வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கான ஒரு குலதெய்வம் உண்டு என்றால் அது முருகப்பெருமான் தான் 600க்கும் மேற்பட்ட கோயில்கள் கொண்டு தமிழ்நாட்டில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார் தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்களின் ஆதி கடவுளாக முருக பெருமான் விளங்கி வருகின்றார் உலகம் முழுவதும் கோயில் கொண்டு மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை தனக்கென வைத்திருக்கிறார் முருக பெருமான்.
சமீபத்திய புகைப்படம்
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய சிறந்த கோயில்களின் ஒன்றான வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
இந்த திருக்கோயில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில் வள்ளி திருமணம் நடந்த தளமாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் முருகப்பெருமான் பத்து அடி உயரத்தில் இருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.
தலத்தின் தகவல்
இந்த கோயில் மிகவும் பழமையான கோயிலாக விளங்கி வருகிறது இங்கு வீட்டில் இருக்கக்கூடிய மூலவர் தென்கிழக்கு பக்கமாக வள்ளி தாயாரோடு காட்சி கொடுக்கின்றார். 10 அடி உயரத்தில் முருகப்பெருமான் பிரம்மாண்டமாக காட்சி கொடுத்து வருகிறார். இதில் சுவாமியின் காதுகள் மிகவும் நீளமாக இருக்கும்.
இதனை காணும் ஆய்வாளர்கள் இது புத்தர் கால கட்டடக்கலை போல் உள்ளது என கூறுகின்றனர். இந்த சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக இல்லாமல் மிகவும் உறுதியோடு இருப்பதாக அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
தலத்தின் பெருமை
கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள முருகன் கோயில் இதுதான். இந்த கோவிலில் கொடுக்கப்படும் கஞ்சியை தர்மமாக வாங்கி சாப்பிட்டால் உடலில் ஏற்படக்கூடிய அனைத்து நோய்களும் நீங்கும் என நம்பப்படுகிறது. வள்ளி தாயார் விளையாடிய இடமாக இது கருதப்படுகிறது.
தல வரலாறு
முருகப்பெருமானுக்கு இருக்கக்கூடிய அறுபடை வீடுகளில் இது ஏழாவது வீடாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் சிறப்பான படைவீடாக இதனை மற்றவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் நம்பிராஜன் இந்த இடத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்கும் வள்ளி தாயாருக்கும் இங்குதான் திருமணம் நடைபெற்றதாக கூறுகின்றனர்.
முருக பெருமான் வள்ளி தாயாரோடு தென்கிழக்கு பக்கமாக 10 அடி உயரத்தில் காட்சி கொடுக்கின்றார். மேலும் கேரளா மாநிலத்தின் எல்லையில் இந்த கோயில் அமைந்துள்ளதால் மிகவும் பிரபலமாக கருதப்படுகிறது.
அமைவிடம்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பல பேருந்துகள் இந்த கோயிலுக்கு செல்கின்றன. அதேசமயம் வாகன வசதிகளும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9