தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Variyar Swamigal: ’பாமரனுக்காக ஆன்மீகம் பேசிய செம்மல்! வாரியார் சுவாமிகள் நினைவுதினம் இன்று!’

Variyar Swamigal: ’பாமரனுக்காக ஆன்மீகம் பேசிய செம்மல்! வாரியார் சுவாமிகள் நினைவுதினம் இன்று!’

Kathiravan V HT Tamil

Jan 06, 2024, 08:54 PM IST

google News
”அவரது சொற்பொழிவுகள், எழுத்துக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உரைகள் ஆன்மீக ஞானத்தின் காலமற்ற களஞ்சியமாக உள்ளது”
”அவரது சொற்பொழிவுகள், எழுத்துக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உரைகள் ஆன்மீக ஞானத்தின் காலமற்ற களஞ்சியமாக உள்ளது”

”அவரது சொற்பொழிவுகள், எழுத்துக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உரைகள் ஆன்மீக ஞானத்தின் காலமற்ற களஞ்சியமாக உள்ளது”

தமிழ் ஆன்மீக சொற்பொழிவாளர்களில் முன்னோடியான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தமிழ் நிலப்பரப்பில் தவிர்க்க முடியாத அடையாளம். அவரது ஆன்மீக பணிகள் இந்தியாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள ஆன்மீக நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளது. போதனைகள், சேவைகள், மற்றும் மனித நலனுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டு ஆன்மீக அறிவொளியை நோக்கிய பயணத்தில் ஈடுபட செய்தது

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

பிறப்பும் வளர்ப்பும்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் காட்பாடிக்கு அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசர் - மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். தனது ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் உள்ள பாணிபத்தர தேவர் மடத்தில் சிவலிங்கதரணம் செய்யப்பட்டார்.

திருமணம்

வாரியாரின் தந்தை இசையிலும், இயலிலும் வல்லமை பெற்றவர், மாபெரும் புராண வல்லுனர் என்பதால் அவரே இவருக்கு கல்வி, இசை, இலக்கியம், இலக்கண முறைகளை கற்றுத் தந்தார். 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றலை பெற்ற இவர் 12 வயதில் நூற்றுக்கணக்கான தமிழ் பாடல்களை மனணம் செய்து தனது 18 ஆவது வயதில் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். தனது 19ஆவது வயதில் அமிர்தலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பாமர மக்களிடம் ஆன்மீகம் வளர்த்தவர்

தனது தமிழ்ப்புலமையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்பாக்களை வாரியார் சுவாமிகள் இயற்றி உள்ளார். இசையுடன் கூடிய சொற்பொழிவுகளை நடத்தி திருப்புகழ், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பாடல்களை இன்னிசையுடன் மக்களிடம் கொண்டு சென்றார்.

இவரது ஆன்மீக மொழி பாமர மக்களுக்கும் புரியும் படி இருந்ததால் ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களையும் ஆன்மீகம் சார்ந்து இழுக்க முடிந்தது. இவரது சொற்பொழிவுகள் எளிய தமிழில் நகைச்சுவை உணர்வுடன் கூடிய நடைமுறை செய்திகளை கொண்டுள்ளதால் எல்லா தரப்பினரையும் ஈர்த்தது.

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் போதனைகள் அவரைப் பின்பற்றுபவர்களின் இதயங்களிலும் மனதிலும் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. அவரது சொற்பொழிவுகள், எழுத்துக்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உரைகள் ஆன்மீக ஞானத்தின் காலமற்ற களஞ்சியமாக உள்ளது.

எழுத்துப்பணி

சொற்பொழிவுகளையும் தாண்டி சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நூல்களை வாரியார் சுவாமிகள் எழுதி உள்ளார். குழந்தைகளுக்காக “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்” என்ற நூலையும் அவர் எழுதி உள்ளார். அவரது பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்து சக்கை போடு போட்டுள்ளன. தற்போதுள்ள யூடியூப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை ஆயிரக்கணக்கானோர் கேட்டு வருகின்றனர்.

மறைவு

1993ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி லண்டன் சென்ற வாரியர் சுவாமிகள் 1993ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி அன்று இந்தியா வரும் போது விமான பயணத்திலேயே காலமானார். அவர் பிறந்த ஊரான காங்கேயநல்லூரில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் கோயில் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாளை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாடுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி