தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Horoscope Today: அலைச்சல்கள் அதிகரிக்கும், கவனம் தேவை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Horoscope Today: அலைச்சல்கள் அதிகரிக்கும், கவனம் தேவை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Oct 15, 2023, 05:04 AM IST

google News
Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (அக்டோபர் 15) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (அக்டோபர் 15) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்று (அக்டோபர் 15) எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு உண்டான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

சமீபத்திய புகைப்படம்

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம்

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமிர்த்தமான கருத்துகளுக்கு ஆதரவு மேம்படும்.

மிதுனம்

நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். குலதெய்வப் வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

நெருக்கடியான சூழல்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

சிம்மம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும்.

கன்னி

இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும்.

துலாம்

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவல் பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்

கடன் பிரச்னைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும்.

தனுசு

மனதில் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும்.

மகரம்

அலைச்சல்கள் நிறைந்த நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். 

கும்பம்

துணிவு நிறைந்த நாள். தடைபட்ட சில பணிகளை முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் உண்டாகும்.

மீனம்

உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி