Parimala Ranganathar: 108 வைணவ திருக்கோயில்களில் ஒன்றான பரிமள ரங்கநாதர்
Nov 09, 2022, 08:01 PM IST
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் குறித்து இங்கே காண்போம்.
திரு. இந்தளூர் பரிமலரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடம் பெற்ற 108 வைணவ திருக்கோயில்களில் 26வது திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நிலமும் இருநூற்று முப்பது அடி அகலம் கொண்ட பெரிய தலமாகும்.
சமீபத்திய புகைப்படம்
இத்திருத்தலம் பஞ்சரங்கு தலங்களில் ஒன்று காவிரி கரையில் அமைந்திருக்கும் வைணவ தலங்களில் ஐந்து தலங்கள் முக்கியம் வாய்ந்தவை திருவரங்கபட்டினம், திருவரங்கம், அப்பாலரங்கம், மத்திய அரங்கம், பரிமளரங்கம் இவற்றின் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு சிறப்பு திரு. இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் ஆலயம்.
தட்சனின் சாபத்தால் காயரோக நோய்க்கு ஆளான சந்திரன் இங்கே தவமிருந்து பெருமாள் அருளால் விமோசனம் அடைந்த காரணத்தினால் இவ்வூருக்கு இந்துபுரி என்றும் இதன் நாளடைவில் இந்தளூர் என்று மருவியதாக வரலாறு கூறுகிறது. இந்து புஷ்கரணி இதில் நீராடி ஸ்ரீ பரிமள ரங்கநாதரை வழிபட சந்திர தோஷம் நீங்கும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
பரிமள ரங்கநாதர் நான்கு திருக்கரங்களுடன் வீர சயன கோலத்தில் பச்சை நிற கிருமேனியுடன் காட்சி தருகிறார். ஸ்ரீ பரிமள ரங்கநாதரின் முகார விந்தத்தில் சூரியன், பாதார விந்தத்தில் சந்திரன், நாபி கமலத்தில் பிரம்மா ஆகியோர் பூஜிக்கின்றனர். தென்புறத்தில் காவிரி தாயும், வலப்புறம் கங்கையும் ஆராதிக்கின்றனர்.
இமயன் மற்றும் அம்பரீசன் ஆகியோர் எம்பெருமானின் திருவடியை அர்ச்சிக்கின்றனர். இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறும் பங்குனி மாதத்தில் காவேரியில் நீராடினால் கங்கையில் நீராடியதை விட அதிக பலங்கள் கிடைக்கும் என்று தலபுராணம் கூறுகிறது.
ஸ்ரீ பரிமள ரங்கநாயகி தாயார் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சந்தான கோபாலனின் சிறிய விக்ரகத்தை மடியில் வைத்து பிரார்த்திக்க புத்திர பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஆஞ்சநேயருக்கு தினமும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
சம்ரூச்சனத்திற்கு முன்னதாக திருப்பணிகள் நடைபெற்ற வேளையில் காப்பு நீக்கும் போது தான் மூலவரான பரிமள ரங்கநாதர் பச்சை மரகத கல்லால் என்பதே தெரிய வந்தது. மாதம் தோறும் உத்திரபிரக்கன்று மூலவரின் திருமேனிக்கு செம்பனாதி தைலம், திருமுகத்திற்கு புனுகு ஜவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது. ஐப்பசி தேரோட்டம் மற்றும் காவிரியில் தீர்த்தவாரி ஸ்ரீ ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் பத்து நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.