Narasimhar Temple: நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நரசப்புரம் சம்மத நரசிம்மர்!
Sep 01, 2023, 07:00 AM IST
கிருஷ்ணகிரி அருகே உள்ள நரசப்புரம் சம்மத நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் இருந்து 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது நரசப்புரம். இங்குள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயம் தனித்துவம் கொண்டது. இந்த திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
சமீபத்திய புகைப்படம்
'புரம்' என்ற சொல்லுக்கு காத்தல் என பொருள். ஒரு சமயம் இந்த ஊருக்கு திருட வந்தவர்களை மரத்தை பிடுங்கி அடித்து விரட்டினார் இங்க குடி கொண்டுள்ள நரசிம்மர். அதனால் இப்பகுதிக்கு 'நரசப்புரம்' என பெயர் வந்தது. அம்மரத்தை இன்றும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இப்பகுதியில் ஓடும் பார்கவி ஆற்றில் சிலையாக கிடந்த நரசிம்மர், பஞ்சு வியாபாரி ஒருவரிடம் "என்னை எடுத்து வழிபாடு செய்" எனச் சொன்னார். நான் எப்படி உங்களை தூக்கிச் செல்வேன் என நரசிம்மரிடம் அவர் கேட்க, பஞ்சு மூட்டை போல் இருப்பேன்" என வாக்களித்தார். அதன்படி, சிலையை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். பிறகு பிரகாரத்துடன் கோயில் எழுப்பப்பட்டது. அபய வரத கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் நின்ற கோல நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். இந்த திருத்தலத்துக்கு நரசிம்மர் 'சம்மத நரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் இவர் மிகுந்த சிறப்பு வாய்ந்தவர். இவரிடம் மிக எளிதில் பக்தர்கள் செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். இவர் மனது வைத்தால்தான் இந்த கோயிலுக்கு செல்ல முடியும். பிரச்னைகளுக்கு சுவாமியிடம் பூ போட்டு கேட்கும் வழக்கம் இங்கு உள்ளதால், இவரை சம்மதம் தரும் நரசிம்மர் எனவும் பக்தர்கள் அழைக்கின்றனர்.
சுவாமியின் உக்கிரத்தை தணிக்கும் வகையில் அவரது இடது புறத்தில் மஹாலட்சுமி தாயார் உள்ளார். சன்னதி எதிரே கருடாழ்வார், கருடத்தம்பத்தை காணலாம். இந்த தலத்தில் சுவாதி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்தால் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக திருமணம் கைகூடும் தலமாக இது திகழ்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்