மிட்டாய் முருகன் கோயில் தெரியுமா?
Aug 09, 2022, 08:59 PM IST
ஒட்டன் சத்திரம் குழந்தை வேலப்பர் சுவாமி கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
திண்டுக்கல்லிலிருந்து பழனி செல்லும் சாலையில் அமைந்துள்ளது குழந்தை வேலப்ப சுவாமி திருக்கோயில். மிகவும் பழமையான இந்த கோயில் பழனி தண்டாயுதபாணி கோயிலின் உப கோயில்களில் ஒன்றாக விளக்குகின்றது.
சமீபத்திய புகைப்படம்
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் மலை மேல் காட்சியளிக்கும் முருகப்பெருமானைப் போல அரசபிள்ளைப்பட்டியில் மலை மேல் குழந்தை வேலப்ப சுவாமியும் அருள்பாலிக்கின்றார். மற்ற கோயில்களைப் போன்று இல்லாமல் சற்று வினோதமாக மிட்டாய்களைக் காணிக்கை செலுத்தி வினோத வழிபாடு செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் குழந்தை வரம், கல்வி, செல்வம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வைத்து நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதனால் இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனுக்கு மிட்டாய் முருகன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இக்கோயிலில் நுழைவாயில் சித்தி விநாயகர் சர்பத்துடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கின்றார். உட்பிரகாரத்தில் காலபைரவரும், தக்ஷிணாமூர்த்தியும், சண்டிகேசுவரரும் அருள்பாலிக்கின்றனர்.
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று காலபைரவருக்குச் சிறப்பு அபிஷேக் ஆராதனைகள் நடைபெறுகின்றன. கோயிலின் கருவறை மண்டபத்தில் பார்வதி திருக்கல்யாணம், வள்ளி தெய்வானை முருகர் திருக்கல்யாணம், விநாயக திருக்கல்யாணம் உள்ளிட்ட காட்சிகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டு இருக்கின்றது.
கோயிலின் மூன்று கால பூஜைகளும் நடைபெறுகின்றது. அரளி மரம் தான் இத்தலத்தின் தல விருட்சமாகும். மேலும் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனிக்குச் செல்லும் பக்தர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பின்பே பழனி முருகனைச் சந்திக்கப் பாதயாத்திரையாகச் செல்கின்றனர்.