ராமர் பாதம் கோயில் போலாமா…
Aug 23, 2022, 05:26 PM IST
கெந்தமாதனபருவதம், ராமர் பாதம் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அழகிய மணல்மேட்டில் உள்ளது ராமர் பாதம் ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பலர் இந்த கோயிலுக்குத் தவறாமல் சென்று வருகின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
ஸ்ரீ ராமனின் மனைவி சீதா பிராட்டியை ராவணன் இலங்கைக்குக் கடத்தி சென்ற பின்பு ராமபிரானும் லக்ஷ்மணனும், அனுமானும் சேனைகளுடன் ராமேஸ்வரம் கெந்ததமாதனபருவதம் எனும் இடத்தில் நின்று இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் அமைப்பது பற்றி ஆலோசனை செய்ததாக ராமாகிய காவியத்தில் கூறப்பட்டுள்ளது.
ராமர் நின்ற இடத்தில் இவரது இரு பாதத்தை வைத்து பூஜைக்கு முடிவு செய்த விஜய நகரச் சாம்ராஜ்ய மன்னர்கள் 1480 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பாத கோயிலை உருவாக்கி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரத்தின் நிலமட்டத்திலிருந்து 60 கிலோமீட்டர் உயரத்தில் மணல்மேட்டில் அமைந்துள்ள இந்த கோயில் சுண்ணாம்பு பாறைகளால் கட்டப்பட்டது.
ராமேஸ்வரத்தில் 530 ஆண்டுகளாகக் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ராமர் பாதம் அமைந்துள்ள இந்த கோயில். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கெந்ததமாதனபருவதம் செல்லும் வழியில் உள்ள ஒரு இரண்டடுக்கு வளாகத்தில் ராமருடைய பாதம் ஒரு சக்கரத்தில் பதிக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் மூலவர் ராமநாதசுவாமி என அழைக்கப்படுகின்றார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி நாகநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் எனப் பக்தர்கள் நம்புகின்றனர். சீதையை ராவணன் சிறைபிடித்துச் சென்றதும் அவரை மீட்கத் தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு ராமரும், அனுமரும் வானர சேனைகளும் பாலம் அமைத்தனர்.
இக்கட்டுமான பணியை ராமபிரானோ ராமேஸ்வரத்தில் எந்ததமாதனபருவதம் அதாவது உயரமான மணல் திட்டத்தில் வென்று பார்த்ததாகக் கூறப்படுகின்றது. ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து ராமரின் பாதத்தை வழிபட்டுச் செல்கின்றனர்.