தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில் வழிபாடுகள்!

ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில் வழிபாடுகள்!

Jul 15, 2022, 02:03 AM IST

google News
திருநெல்வேலி ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.
திருநெல்வேலி ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

திருநெல்வேலி ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில் குறித்து இங்கே காண்போம்.

திருநெல்வேலியிலிருந்த சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஶ்ரீ சிவந்தியப்பர் திருக்கோயில். இத்திருகோயிலில் வடமொழியில் ஸ்ரீ மார்க்க சம்பிரச்சனி, ஸ்ரீ சிவ பாலீஸ்வரர் என இறைவனை அழைக்கின்றனர்.

சமீபத்திய புகைப்படம்

நாளை அஸ்தமனத்தில் அடித்து விரட்டும் புதன்.. ஆட்டம் ஆரம்பமாகும் ராசிகள்.. இனி கையில் பிடிக்க முடியாது

Nov 30, 2024 05:12 PM

தனுசு ராசியில் குறிவைத்த சுக்கிரன்.. நவம்பரில் நடனமாடும் ராசிகள்.. இனி உங்களுக்கு உச்சம் தான்!

Nov 30, 2024 11:19 AM

குரு செம குத்தாட்டம்.. இந்த ராசிகள் என்ன செய்தாலும் மாறாது.. உங்க ராசி என்ன?.. வந்து பாருங்க..!

Nov 30, 2024 10:49 AM

மேஷம், ரிஷம், மிதுனம், சிம்மம், கும்ப ராசியினரே எச்சரிக்கை.. எல்லாமே சிக்கல் தான்.. செவ்வாய் சிரமம் தரலாம்!

Nov 30, 2024 10:10 AM

மாடி வீடுகளை வாங்கும் ராசிகள்.. பணத்தில் குளிப்பாட்டப் போகும் கேது.. 2025 உங்களுக்கு உச்சம்தான்

Nov 30, 2024 06:00 AM

‘நிதானம் முக்கியம்.. நிம்மதி நிரந்தரம்.. நடுக்கம் வேண்டாம்.. நல்லதே நடக்கும்’ மேஷம் முதல் மீனம் வரையான ராசிபலன் இதோ!

Nov 30, 2024 05:00 AM

இத்தலத்தின் அருகில் உள்ள பாபநாசம் தளத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உலக அம்மையின் பேரருளைப் பெற்ற ஸ்ரீ நமச்சிவாய கவிராயர் வாழ்ந்த புண்ணிய தலமாக இந்த தலம் விளங்குகின்றது. நாயக்க மன்னர் சிவந்தியப்பரால் கட்டப்பட்ட கோயில் என்பதால் இக்கோயிலில் உள்ள சுவாமிக்கு சிவந்தியப்பர் எனப் பெயர் சூட்டப்பட்டதாகக் கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.

நாயக்கர் மன்னர்கள் உருவமே கோயிலின் கொடிமரம் கடந்து உள்ளே செல்லும் வாயிலில் எதிர் எதிராக சிவந்தியப்பர் நாயக்கரும், முத்து வீரப்ப நாயக்கரின் உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அருகில் பொக்கிஷத்தர்கள் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருக்கோயிலில் திருவனந்தல், கால சந்தி, சாயரட்சை, அர்த்த சாம பூஜை, நான்கு கால பூஜை என அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசித் திருவிழா 10 நாட்கள் கொடி ஏற்றப்பட்டு பத்து நாட்களும் சுவாமி அம்பாள் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.

அது மட்டும் இன்றி ஆண்டுதோறும் வரும் ஸ்ரீ கந்தசஷ்டி திருவிழாவைப் போற்றி ஆறு நாட்களும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் மூன்று தினங்கள் 108 ஸ்ரீரங்கல், 108 கல் சங்குகள், 108 கலசங்கள் வைத்துச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது

அடுத்த செய்தி