மதுரை பாண்டி கோயில் சிறப்புகள்!
Jul 07, 2022, 11:35 AM IST
மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காணலாம்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை ராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ளது பாண்டி கோயில். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் புதைந்திருந்த எட்டு அடி சிலையை மீட்ட பொதுமக்கள் அதை பாண்டி முனீஸ்வரராக வழிபடத் தொடங்கினர்.
சமீபத்திய புகைப்படம்
எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கர்ப்ப கிரகம் வரை சென்று முனீஸ்வரரை தரிசிப்பது கோயிலின் சிறப்பம்சம். உலகின் பிற காவல் தெய்வங்களை போல் அல்லாமல் பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார் பாண்டி முனீஸ்வரர்.
பாண்டி, ஆண்டி, சமயன் என மூன்று தெய்வங்கள் கோயிலில் வீற்றிருக்கின்றார். பாண்டியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆண்டிக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டிக்கு விருப்பமான மாம்பழத்தை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
பாண்டி முனீஸ்வரர் மூல கடவுளாகவும், விநாயகர், சமயன், கருப்பசாமி, ஆண்டிச்சாமி ஆகியோர் உப கடவுளாகவும் வீற்றிருக்கின்றனர்.
பாண்டி முனீஸ்வரருக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனி விழா கொண்டாடப்படுகிறது. பாண்டி முனீஸ்வரருக்கு சர்க்கரை பொங்கல் படைத்தும், சமயன் கருப்புக்கு ஆடு, கோழி பலியிட்டும் பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆண்டியின் தலம் முழுவதும் மாம்பழங்களால் அலங்கரிக்கப்பட்டு வெண் பொங்கல் பிரசாதம் வைக்கப்படுகிறது.
சைவரான பாண்டிக்கு நெய், பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. தென்மாவட்ட மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் பாண்டி முனீஸ்வரரை தரிசிக்க செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
பாண்டி முனீஸ்வரருக்கு மொட்டை அடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் மதுரை மாட்டுத்தாவணி மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.