தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு தூண்டி விடப் போகிறார்.. தூண்டிலில் சிக்கிய ராசிகள்.. தொடாமல் நகர்ந்து போங்க.. உங்களுக்கு நல்லது

குரு தூண்டி விடப் போகிறார்.. தூண்டிலில் சிக்கிய ராசிகள்.. தொடாமல் நகர்ந்து போங்க.. உங்களுக்கு நல்லது

Nov 23, 2024, 04:53 PM IST

google News
Guru Bhagavan:
Guru Bhagavan:

Guru Bhagavan:

Guru Bhagavan: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் முன்னிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி என்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி என்று குரு பகவான் வக்கிர நிலையில் பயணத்தை தொடங்கினார். குரு பகவானின் ரிஷப ராசி வக்கிர பயணம் ஆனது வருகின்ற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருக்கும். இதன் மூலம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் வக்கிரனில் அடைந்துள்ளார். எதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்களை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். அதனால் உங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை யோகம் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் குரு பகவான் வக்கிரநிலையை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிறைய பணத்தை சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி