Guru peyarchi 2024: ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’.. கெட்ட இடத்தில் குரு.. மிஞ்சுமா மிதுனம்!
Feb 24, 2024, 09:25 AM IST
எப்போதுமே உபய ராசிகளுக்கு ஏழாம் இடம் என்பது மாரகம் மற்றும் பாதக ஸ்தானமாக வருகிறது. அந்த வகையில் குரு பகவான் ஏழாம் இடமான தனுசு ராசிக்கு அதிபதியாக வருகிறார்.
மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் எவ்வாறு அமையும் என்பது குறித்து, பிரபல ஜோதிடர் சுபாஷ் பால கிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலுக்கு பேசிய தகவல்கள் இவை!
சமீபத்திய புகைப்படம்
அவர் பேசும் போது, “குரு பெயர்ச்சியானது ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு குருவானவர் மேஷ ராசியிலிருந்து, ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார்.
இந்த இடப்பெயர்ச்சியில் கிருத்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் இருந்து, இரண்டாம் பாதத்திற்கு செல்ல இருக்கிறார். இந்த இடப்பெயர்ச்சி வருகிற ஏப்ரல் 30ம் தேதி நடக்கிறது.கல்விக்காரகனாக, தனக்காரகனாக, மேல்நிலை பதவிகளை கொடுப்பவனாக குரு பகவான் இருக்கிறார்.
மிதுன ராசி கால புருஷனுடைய மூன்றாவது வீடு என்று அழைக்கப்படுகிறது. புதன் பகவான் ஆட்சி பெறக்கூடிய வீடு.
எப்போதுமே உபய ராசிகளுக்கு ஏழாம் இடம் என்பது மாரகம் மற்றும் பாதக ஸ்தானமாக வருகிறது. அந்த வகையில் குரு பகவான் ஏழாம் இடமான தனுசு ராசிக்கு அதிபதியாக வருகிறார்.
மாரகம் என்ற உடன் எல்லோரும் ஆளை கொன்று விடுவார்கள் என்று நினைப்பார்கள். அப்படி இல்லை, மரணத்திற்கு இணையான சில சம்பவங்கள் நடக்கும். அதேபோல பாதக ஸ்தானம் என்பது பல வகையான சோதனைகளை தரக்கூடிய இடமாக இருக்கும்.
குருபகவான் ஒரு முழு சுபர் அவர் கூடிய மட்டும் நல்ல பலன்களே தருவார்கள். உங்கள் ராசிக்கு மாரகாதிபதி மற்றும் பாதகாதிபதியான குரு பகவான், நல்ல இடத்திற்கு வந்தால் தான் தவறு. காரணம், அவர் நல்ல இடத்தில் சென்று உட்கார்ந்தால், உங்களது எதிரி வலுக்கிறார் என்று அர்த்தம்.
ஆனால் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு 12-ஆம் இடத்தில் சென்று மறைவது மிகப்பெரிய யோகம் மாறும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழி இதற்கு பொருந்தும்.
ஆகையால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடமானது திருமணங்களை நடத்தி வைக்கக்கூடிய காலகட்டமாக மாறுகிறது.
ஏற்கனவே சனி பகவான் அஷ்டமஸ்தானத்தில் இருந்து பாகிஸ்தானத்திற்கு மாறி, ஆட்சி ஆகி, மூலத்திரிகோணம் அடைந்து, பாக்யாதிபதி பாக்கியத்தில் ஆட்சி பெறுவது மிகப்பெரிய பலன்களை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். கூடவே உங்களது எதிரி வேறு மறைகிறார்.
ஆகையால் இதுவரை பட்ட அவஸ்தைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்