தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Spiritual Yatra: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமே கிடையாது.. தொடங்கியது எப்போது?

HT Spiritual Yatra: ஐயப்பனுக்கு நெய் அபிஷேகமே கிடையாது.. தொடங்கியது எப்போது?

Dec 06, 2023, 03:08 PM IST

google News
சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் எப்போதிலிருந்து தொடங்கப்பட்டது என்பது குறித்து காணலாம்.
சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் எப்போதிலிருந்து தொடங்கப்பட்டது என்பது குறித்து காணலாம்.

சபரிமலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் எப்போதிலிருந்து தொடங்கப்பட்டது என்பது குறித்து காணலாம்.

சபரிமலையில் பிரம்மச்சாரியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஐயப்பனுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம். கார்த்திகை மாதம் மிகவும் விசேஷ மாதமாக கருதப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக சபரிமலைக்கு செல்வார்கள்.

சமீபத்திய புகைப்படம்

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

தரையில் இருந்து பணத்தில் மிதக்க போகும் ராசிகள்.. புதன் காற்று வீசுகிறது.. இனி உங்களுக்கு உச்சம் மட்டும்தான்!

Nov 23, 2024 09:57 AM

குருபகவான் அணை உடைந்தது.. குற்றாலம் போல் பணமழை கொட்டும் ராசிகள்.. வாழ்க்கை மாறும்.. மகிழ்ச்சி பொங்கும்

Nov 23, 2024 06:30 AM

கார்த்திகை மாதம் வந்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஐயப்பன் தான். ஐயப்பனை தரிசனம் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. ஒரு மண்டலம் விரதம் இருந்து கடுமையான மலை பாதையில் பயணம் செய்து எடுத்துச் சென்ற நெய்யை அவருக்கு அபிஷேகம் செய்துவிட்டு தரிசனம் செய்வார்கள் பக்தர்கள்.

ஐயப்பனை தரிசனம் செய்யும்போது நெய் அபிஷேகத்தில் பார்ப்பது ஒரு மிகப்பெரிய கொடுப்பனையாக கருதப்படுகிறது. நெய் அபிஷேகத்தில் பார்த்து விட்டால் வாழ்க்கையில் விமோசனம் பெற்றதாக பக்தர்கள் கதறி அழுவதை பலரும் கண்டது உண்டு.

அந்த அளவிற்கு ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. 1800 ஆம் ஆண்டு வரை சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பன் உருவச்சிலை மரத்தால் செய்யப்பட்ட சிலையாக இருந்தது.

ஐயப்பன் உருவம் மர விக்ரகம் என்கின்ற காரணத்தினால் அதுவரை நெய் அபிஷேகம் நேரடியாக செய்யும் வழக்கம் இல்லாமல் இருந்து வந்துள்ளது. ஐயப்பனுக்காக பக்தர்கள் எடுத்துச் செல்லும் நெய் அங்கு இருந்த நெய் தோணியில் கொட்டும் பழக்கம் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

பின்வரும் காலங்களில் ஐயப்பனின் விக்ரகத்திற்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் எடுத்துச் செல்லும் நிலை நேரடியாக இப்போது ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அதுவே பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.

இப்போது கூட சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரக்கூடிய பழைய பக்தர்கள் நெய் தோணியில் நெய்யை கொட்டி விட்டு அதிலிருந்து கொஞ்சம் நெய்யை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய வரதராஜ பெருமாள் கோயில் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கோயிலில் அத்திவரதர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உண்டு. கடந்த 2019 ஆம் ஆண்டு கோயிலில் வீற்றிருக்கும் குளத்தில் இருந்து அத்திவரதர் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டார்.

அத்தி மரத்தால் செய்யப்பட்டதால் அவர் அத்திவரதர் என அழைக்கப்பட்டார். மரத்தால் செய்யப்பட்ட விக்ரகம் என்கின்ற காரணத்தினால் அது தாரு சிலை ஆகும். அதேபோலத்தான் 1800 ஆம் ஆண்டு வரை தாரு சிலை விக்ரகமாக ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி