Mythological Story: பகவான் கிருஷ்ணர், இந்திரன், ஸ்ரீ ராமர் தொடர்புடைய பண்டிகை கதை!
Nov 16, 2023, 06:40 AM IST
ஹிமா எனும் மன்னரின் மகன், தனது 16ம் வயதில் சர்பமொன்றினால் மரண மடைவான் என்று ஜோதிடவல்லுனர்கள் கூறினர்.
அந்த கால பிராக்ஜோதிஷபுரம் என்றழைக்கப்பட்ட, இப்போதைய கவுகாத்தியை ஆட்சி செய்து கொண்டு, யுகம் கடந்தும், திருந்தாதிருந்த, அனைவரையும் கஷ்டத்திற்கு ஆளாக்கிய நரகாசுரனை, பகவான் கிருஷ்ணருடன் சாரதியாகச் சென்ற, பூமா தேவிதான் வதம் செய்து, தீபாவளிக் பண்டிகைக் கொண்டாடக் காரணமாயிருந்தார். இந்த திருநாளை, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்கள் ஐந்து நாள் விழாவாக, கொண்டாடி மகிழ்கின்றனர்.
சமீபத்திய புகைப்படம்
1.இந்திரனை,நரகாசுரன் வென்று, ராஜ்ஜியத்தைப் பிடுங்கி,அங்கிருந்த சுமார் 16000 பெண்களை சிறை பிடித்துச் சென்றான்.தாய் அதிதி அணிந்திருந்த மந்திர கம்மலையும் எடுத்துப் போனான். அதிர்ச்சி அடைந்து அனாதி ஆகிப்போன தேவர்கள், ஸ்ரீ விஷ்ணு பகவானை உதவ வேண்டிய போது,அவர் அசுரனிடம் போரிட்டு ,அனைத்துப் பெண்களையும் காத்து,அதிதி தாயின் கம்மலையும் மீட்டு,அனைவரையும் மரண பயத்திலிருந்து காத்தார்.இந்த இனிய நன்நாளை நரக சதுர்த்தியாகத் தீபாவளியின் இரண்டாம் நாளில் தொடர்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.
2.ஹிமா எனும் மன்னரின் மகன், தனது 16ம் வயதில் சர்பமொன்றினால் மரண மடைவான் என்று ஜோதிடவல்லுனர்கள் கூற,இளவரசனின் புது மனைவி, தன்,பத்திசாலித் தனத்தால்,வீடு எங்கும்,விளக்கேற்றி,ஒரே ஒளி மயமாக்கி,பாம்பு வீட்டிற்குள் வந்து விடாதபடி,தீப ஒளி உமிழ,வாசற்பகுதியில் தங்க,வைர,வைடூர்ய நகை அனைத்தையும் வைத்து, அவற்றில் தீப ஒளி பட்டு பிரதிபலிக்க,அரண்மனை முழுதும் பிரகாசித்தது.
குறிப்பிட்ட நேரத்தில் சர்ப்ப ரூபத்தில், எமன் வர,அந்த பிரகாசமான ஒளியிலும், இளவரசி தனது தேனினும் இனிய குரலெடுத்து பாடிய பாடலும் கேட்டுத் திணறி, திக்கு முக்காடிப் போய், செயலிழந்து,மெய்மறந்து விட,பொழுது புலர்ந்தது, கெடு முடிந்ததால் அவனை கொல்ல முடியாமல் திரும்பியது.கணவர் உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த நாளை "தந்திர தாஸ்" என தீபாவளிக்கு 2 நாள் முன்பு கொண்டாடி மகிழ்வர்.
3.நாம் கொண்டாடும் தின தீபாவளியை,"தீபாவளிச்சா பட்வா" எனும் பெயரில், தம் வீடுகளை அலங்கரித்து, தமது கணவன்மார்கள், நீண்ட ஆயுள் பெற,ஆலமர த்தில் நூல் கட்டி, அதைச் சுற்றி சுற்றி வந்து வழிபட்டு, பூஜை செய்வர். இதனுடன் லக்ஷ்மி பூஜை நடக்கும். தேவி இன்றய பிரார்த்தனையைக் கேட்பார் என நம்புவர். ராமர் 14 ஆண்டுகள் கழித்து வருவதைக் கொண்டாடும் பாங்கும் உள்ளது. இதுவே முதல் நாள் பெரிய தீபாவளிக் திருநாள்.
4. ஸ்ரீ ராமர், பாலம் கட்டிய சமயம், அனுமன் கோவர்த்தன் மலையைத் தூக்கி வர, அதற்குள் பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதால் மலையை ஓரிடத்தில் வைக்க,மலை விபரம் கேட்க,கிருஷ்ண அவதாரம் போது உன்னைத் தூக்குவார்,அதுவரை, நீ, காத்திரு என அனுமான் பதில் கூறினார்.அதன்படி, கிருஷ்ணர் ,மலையைத் தூக்கி இந்திரனுக்கு பாடம் புகட்டி, காண்பித்ததைக் கொண்டாடுகின்றனர். கிருஷ்ணரின் அவதார மகிமையை, இந்திரன் உணர்ந்த நாளிது. தத்தம் வீடுகளில், மலை போன்று வடிவங்கள் அமைத்து, வழிபடுவர். இதனையே கோவர்தன பூஜை என்பர்.
5. நரகாசுரனைக் கொன்று விட்டு, மகிழ்வில் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், தனது சகோதரி சுபத்திரையின் இல்லம் சென்றார்.அவரை மிகவும் ஆவலுடனும்,மிக அன்புடனும்,ஆசையாக வரவேற்று,வெற்றித் திலக மிட்டு வரவேற்றார் தங்கை, இந்த நாளை இங்கு "பாவ் -பீச்" எனும் விழாவாக தீபாவளிக்கு 2ம் நாள் கொண்டாடி மகிழ்வர். அன்று சகோதரர்கள, தங்களது சகோதரிகள் வீடுகளுக்கு சென்று,நலம் விசாரித்துப் பலவித பரிசுப் பொருட்கள் கொடுத்து மகிழ்வர். அகமும்,முகமும்,உள்ளமும் மலரும் இந்நாள் மிகவும் முக்யத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகின்றது
மராட்டிய மாநிலத்தில் கொண்டாடப்படும் இந்த ஒவ்வொரு நாளுக்கும்,தீபாவளிக் தொடர்புடைய , புராணக் கதைகள் உள்ளன. இது போல் மற்ற மாநில, தீபாவளி தினங்களுக்கும் பல கதைகள் சொல்லப் படுகின்றது.
"உல்லாசம் பொங்கும்
இந்த தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து
ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா"
என்கிற கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரத்தின்
வைரக் கவிதை வரிகள்
உண்மைதானே!!
-கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார்,சென்னை.
டாபிக்ஸ்